2வது அஷஸ் டெஸ்ட் போட்டியிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்! ஆஸ்திரேலியா அணிக்கு பெரிய இழப்பு
2வது அஷஸ் டெஸ்ட் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய நட்சத்திர பந்து வீச்சாளர் விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடந்த முதலாவது அஷஸ் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலைப்பெற்றது ஆஸ்திரேலியா.
இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி டிசம்பர் 16ம் திகதி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இரவு-பகல் போட்டியாக நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில், 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய நட்சத்திர பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் விலகியுள்ளார்.
காயம் காரணமாக ஹேசில்வுட் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹேசில்வுட்டுக்கு பதிலாக Jhye Richardson ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டடில் ஹேசில்வுட் மொத்தம் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.