இறுதிவரை ஆட்டமிழக்காமல் 82 ரன் விளாசிய வீரர்! 457 ஓட்டங்கள் குவித்த மே.தீவுகள்
நாட்டிங்காம் டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் அணி 457 ஓட்டங்கள் குவித்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் முதல் இன்னிங்சை ஆடியது.
அணித்தலைவர் பிராத்வெயிட் 48 ஓட்டங்களும், அதனசி 82 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கவேம் ஹாட்ஜ் 171 பந்துகளில் 120 ஓட்டங்கள் எடுத்தார்.
அதன் பின்னர் விக்கெட்டுகள் சரிய, விக்கெட் கீப்பர் ஜோஷ்வா டா சில்வா மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த ஷமர் ஜோசப் அதிரடியாக 27 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 33 ஓட்டங்கள் விளாசினார்.
A maximum to bring up a gritty half century!?#ENGvWI #MenInMaroon pic.twitter.com/Ny2WUNCqPy
— Windies Cricket (@windiescricket) July 20, 2024
கடைசி விக்கெட்டாக அவர் அவுட் ஆக, மேற்கிந்திய தீவுகள் 457 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. இறுதிவரை களத்தில் நின்ற ஜோஷ்வா 3 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 82 ஓட்டங்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
மாற்றுத்திறனாளி இலங்கை சிறுமிக்கு இன்ப அதிர்ச்சி தந்த ஸ்மிருதி மந்தனா! மகிழ்ச்சியில் பேசிய தாய் (வீடியோ)
இதனைத் தொடர்ந்து 41 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.
Chris Woakes - just very good at cricket. pic.twitter.com/ygO9j75wo1
— England Cricket (@englandcricket) July 20, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |