தலைவா... அசத்திடுங்க... மைதானத்தில் விராட் கோலிக்கு ரசிகனாக மாறிய வெ.இ வீரர் ஜோஷ்வா!
நேற்றைய ஆட்டத்தில் விராட்கோலியும், வெ.இ.வீரர் ஜோஷ்வா உரையாடல் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விராட் கோலிக்கு குவியும் எதிரணி ரசிகர்கள்
கிரிக்கெட்டில் நட்சத்திர வீரர்களுக்கு சிலருக்கு எதிரணி வீரர்களும் ரசிகர்களாக இருப்பர். அந்த வகையில் விவியன் ரிச்சர்ஸ், சச்சின், பிரையன் லாரா, ஏபி டில்லியர்ஸ் இவர்களுக்குப் பின் தற்போது அந்த இடத்தில் விராட்கோலி இருந்து வருகிறார்.
விராட் கோலிக்கு இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். எதிரணியில் ஆடும் வீரர்கள் கூட மைதானத்தில் போட்டி முடிந்த பிறகு விராட் கோலியிடம் வந்து புகைப்படம் மற்றும் ஆட்டோகிராப் வாங்குகிறார்கள்.
ரசிகனாக மாறிய வெ.இ வீரர் ஜோஷ்வா
இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தின் போது, விராட் கோலி துடுப்பாட்டத்தைப் பார்த்து வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ரசிகனாக மாறி அசந்து போன சம்பவம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று ஆட்டத்தில் விராட் கோலி 70 ஓட்டங்களை கடந்து ஆடிக்கொண்டிருந்தார்.
அப்போது, அவரிடம் ஜோஷ்வா சில்வா, ஒரு ஓட்டங்கள் சேர்க்க வேண்டிய இடத்தில் எப்படி சார் 2 ஓட்டங்களாக மாற்றுகிறீர்கள். அடுத்து "சதத்தை விளாசி விடுங்கள்" என்று ஜோஷ்வா சொல்ல, நான் சதத்தை அடிப்பதற்கு என்னை விட நீங்கள் தான் ஆர்வமாக இருக்கிறீர்கள் போல... என்று சிரித்துக் கொண்டு விராட் கோலி பேசியுள்ளார். அதற்கு ஜோஷ்வா சார்... எனக்கு நல்லா தெரியும். நீங்கள் சதம் விளாசிடுவீங்க என்றார். இந்த உரையாடல் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி இருக்கிறது.
தற்போது இந்த உரையாடல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
இது குறித்து ஜோஷ்வா பேசுகையில், என் அம்மா செல்போனில் என்னை அழைத்து நான் விராட் கோலியின் ஆட்டத்தை நேரில் பார்க்க வருவதாக சொன்னார். என்னால் நம்பவே முடியவில்லை என்று மகிழ்ச்சியாக கூறினார்.
Joshua Da Silva to Virat Kohli:
— s° (@koliesquee) July 21, 2023
"I can't believe my mom called & told me, she is coming just to watch Virat Kohli".pic.twitter.com/FEtxiDZ0mF
Joshua Da silva emits proper Virat Kohli fanboy vibes. He's one of us ?♥️ pic.twitter.com/im4fXEm2Vg
— leisha (@katyxkohli17) July 21, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |