உலகக்கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட்! நியூசிலாந்தை கதிகலங்க வைத்த வீரர்
ஜோஷ்வா லிட்டில் 4 ஓவர்கள் வீசி, 22 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்
நியூசிலாந்து அணி தனது இன்னிங்சில் 185 ஓட்டங்கள் குவித்துள்ளது
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து வீரர் ஜோஷ்வா லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.
நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் உலகக்கோப்பை டி20 தொடர் அடிலெய்டில் நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் அதிரடியில் மிரட்டினார். அவர் 35 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஜோஷ்வா லிட்டில் ஓவரில் ஆட்டமிழந்தார்.
Twitter (@ICC)
அவரைத் தொடர்ந்து வந்த நீஷம் மற்றும் சான்ட்னர் இருவருமே எல்.பி.டபுள்யூ முறையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன்மூலம் லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் சாதனை படைத்தார்.
ஆடவர் டி20 உலகக்கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 6வது பந்துவீச்சாளர் ஜோஷ்வா லிட்டில் ஆவார். அதேபோல் டி20 உலகக்கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய இரண்டாவது அயர்லாந்து வீரர் ஜோஷ்வா லிட்டில் ஆவார்.
That T20 World Cup hat-trick feeling ?#IREvNZ #T20WorldCup #BackingGreen ☘️? pic.twitter.com/Snkgtqkdt0
— Cricket Ireland (@cricketireland) November 4, 2022