யாருக்கும் தெரியாத ரூ.5,000 கோடி ஒப்பந்தம் - திமுக வழியில் தவெக?
தமிழ்நாடு மின்வாரியத்துறையில் நடந்த ஊழல்கள் மற்றும் தவெக அரசு பற்றியும் தமிழா தமிழா பாண்டியன் தனது பார்வையை முன்வைத்துள்ளார்.
ரூ.15,000 கோடி ஊழல்
தமிழ்நாடு மின்வாரியத்துறையில் நடந்த ஊழல்கள் குறித்து பேசிய அவர், "தமிழ்நாடு மின்வாரியத்துறையின் ஆண்டு வரவு செலவு சுமார் ரூ.60,000 கோடி. இதில் 25% அதாவது சுமார் ரூ.15,000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது.
இது வழமையாக திமுக, அதிமுக, தவெக என யார் வந்தாலும் ஊழல் நடக்கும்.
அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரி இந்தோனேசியாவில் கொள்முதல் செய்யப்பட்டது. 2021 ஆம் ஆண்டு ஆட்சி அமைந்ததும் 3 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை என செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
எப்படி 3 லட்சம் டன் நிலக்கரி காணாமல் போகும்? இதற்கு முன்பு மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் அதிமுகவை சேர்ந்த தங்கமணி. எந்த நடவடிக்கையும் இல்லை. செந்தில் பாலாஜி 471 நாள் திகார் சிறையில் இருந்தவர்.
இன்று வரை பாட்டிலுக்கு ரூ.10 போகுது. இப்போ செந்தில் பாலாஜி இல்லை. ஆனால் பணம் போகுது. யாருக்கு போகுது. விஜய் டான்ஸ் ஆடுனாரு. ஆனால் அந்த ரூ.10 கோடி யாருக்கு போகுதுனு தெரியலை. இப்போ ஆட்சி காட்சி எல்லாம் மாறி விட்டது.
3 லட்சம் டன் நிலக்கரியை வாங்காமலே அதற்கான பணத்தை கொள்ளையடித்துள்ளார்கள். செந்தில் பாலாஜி அந்த கொள்ளையடித்த பணத்தில் பாதியை வாங்கிக்கொண்டார். இல்லைனா தங்கமணி சிறைக்கு போயிருக்கணும். நீதிமன்றத்தில் நிரூபித்தால் 10 ஆயுள்தண்டனை கிடைக்கும். ஆனால் ஒரு நடவடிக்கை இல்லை.
தமிழ்நாடு பட்ஜெட் 2 லட்சம் கோடி, அதுல 40% இந்த திராவிட இயக்கங்கள் திருடிடும். இதுல மத்திய பாஜகவும் பங்கு வாங்கிடும். பாஜக நினைத்தால் திமுகவின் அத்தனை அமைச்சர்களையும் சிறைக்கு அனுப்பி விடலாம். ஏன் அனுப்பல? நாக்பூர் வரைக்கும் லஞ்சம் போகுது. இந்த ஊழல்கள் அனைத்தும் CBI, IB என அனைத்து துறைகளுக்கும் தெரியும் என பேசியுள்ளார்.
ரூ.5000 கோடி கான்ட்ராக்ட்
திமுகவின் இந்த ஊழல்கள் மீது தவெக நடவடிக்கை எடுக்காது. அதனால் தான் ஸ்டாலின் வீட்டுக்கு விஜய் போனார். நீங்க செஞ்ச ஊழலை நான் கண்டுக்க மாட்டேன். நான் செய்யற ஊழலை நீங்க கண்டுக்காதிங்க. இதுதான் ஒப்பந்தம்.
நேற்று கையெழுத்தாகியிருக்கு waste management ஒரு நகராட்சிக்கு ஒரு வருடத்திற்கு ரூ.300 கோடிக்கு குப்பை அள்ளுகிற கான்ட்ராக்ட். ரூ300 கோடில ரூ.30 கோடி கூட செலவு பண்ணமாட்டான். இப்படி 16 நகராட்சிக்கு தூக்கி கொடுத்துருக்காங்க. ககன்தீப் சிங் பேடி நகராட்சி துறைக்கு ஆணையாளர்.
அவருக்கும் இவருக்கும் ரூ.5000 கோடி கான்ட்ராக்ட். திமுக ஆட்சி காலத்தில இருந்த அதே கம்பெனிக்கு, குப்பை அள்ள ஜேர்மனி இருந்து தான் ஆளு வரனுமா? ஏன் அவன் வெளிநாட்டுல இவங்களோட லஞ்ச பணத்தை முதலீடு பன்னிருக்கான்.
விஜய் இதை விசாரிக்கனுமா இல்லையா? புஸ்ஸி ஆனந்தும், ககன்தீப் சிங் பேடியும் பாண்டிச்சேரில வச்சு ஒப்பந்தம் போட்டு, யாருக்கும் தெரியாம ரூ.5000 கோடி ஒப்பந்தத்தை அதே திமுக ஆட்சி காலத்துல கொடுக்கப்பட்ட ஜேர்மனி கம்பெனிக்கு குடுத்துருக்காங்க. எல்லாருக்கும் 10% கமிஷன் கொடுத்துருப்பான்.
இது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும், ஸ்டாலினுக்கு தெரியும், உதயநிதி ஸ்டாலினுக்கு தெரியும். திமுக, அதிமுக ஊழல் செய்ததால் மக்கள் தவெகவை தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் தவெக இவர்கள் செய்ததை தொடர ஆரம்பித்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |