பைடன்-புடின் சந்திப்பு நடக்கும் இடத்தின் நுழைவு வாயில் முன் சலசலப்பு! வெளியான வீடியோ
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகியோர் சந்திப்பு நடந்த இடத்தின் நுழைவு வாயிலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
சுவிஸ் ஜெனீவா நகரத்தின் மிகப்பெரிய பூங்காவில் உளள் எரிக்கு அருகிலுள்ள Villa La Grange-ல் பைடன்-புடின் ஆகியோர் சந்திக்கின்றனர்.
இந்த பேச்சுவார்த்தை 3 கட்டமாக இடைவெளியுடன் சுமார் 5 மணிநேரம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சந்திப்புக்கு பின் முதலில் புடின் தனியாக செய்தியாளர்களை சந்திப்பார் எனவும், அவரை தொடர்ந்து பைடன் தனியாக செய்தியாளர்களை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உலகின் இரு மிக முக்கிய தலைவர்கள் சந்திக்கும் இடத்தின் நுழைவு வாயிலுக்கு முன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமாக குவிந்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைவர்கனை பேட்டி எடுக்கவும் பிரத்யேக காட்சிகளை ஒளிபரப்பவும் சர்வதேச ஊடகங்கள், தங்கள் பத்திரிக்கையாளர்களையும், ஒளிப்பதிவாளர்களைளும் களமிறக்கியுள்ளது.
Chaotic scene as journalists throng entrance to #Putin - #Biden summit's venue#Switzerland #Geneva pic.twitter.com/c6OmFTYMPs
— Ruptly (@Ruptly) June 16, 2021
சந்திப்பு நடக்கும் கட்டிடத்தின் நுழைவு வாயிலுக்கு முன் கமெரா மைக்குகளுடன் குவிந்த பத்திரிக்கையாளர்களை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்பு அதிகாரிகள் திணறிய காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.