உடல் எடையை குறைக்க உதவும் சோள ரொட்டி.., எப்படி செய்வது?
தற்போது பெரும்பாலோருக்கும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை இருக்கிறது.
உடல் எடை அதிகரிக்க அதிகளவு உணவு உண்பது, மன அழுத்தம், அதிகளவு மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற பல காரணங்கள் உள்ளது.
அந்தவகையில், ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க சோள ரொட்டியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சோள மாவு- 1 கப்
- தண்ணீர் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- நெய் - 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
பின் இதில் சோள மாவு சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
மாவு தண்ணீரை உறுஞ்சி கெட்டியாகி வந்ததும் இதனை மூடி போட்டு 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
இதன் பின் இதனை நன்கு பிணைந்துக்கொள்ளவும்.
அடுத்து இந்த மாவை ரொட்டி போல் தேய்த்து தவாவில் நெய் சேர்த்து சுட்டு எடுத்தால் ஆரோக்கியமான சோள ரொட்டி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |