மாதம்பட்டி ரங்கராஜ் என்னை ஏமாற்றி விட்டார்.., இரண்டாவது மனைவி பொலிஸில் புகார்
பிரபலமான சமையல் கலை வல்லுநரான மாதம்பட்டி ரங்கராஜ் 2019ஆம் ஆண்டு வெளிவந்த மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில காலமாகவே மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியிடம் இருந்து பிரிய போவதாகவும், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவரை காதலித்து வருவதாகவும் தகவல் வெளியானது.
இதனைத்தொடர்ந்து, ஜாய் கிரிஸில்டாவை மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம் செய்து கொண்டு சமூக வலைதளத்தில் திருமண புகைப்படத்தை பகிர்ந்தனர்.
மேலும், தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் பதிவிட்டிருந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும், புகாரளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி நான். என்னோட கணவர் ரங்கராஜ் என்னுடன் தொடர்பில் இல்லை. என்னை ஏமாத்திவிட்டார்.
எனக்கும் என் குழந்தைக்கும் நீதி வேண்டும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாங்கள் திருமணம் செய்து ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தோம்.
நான் அவரோடு வாழணும். என் குழந்தைக்கு அவர் தான் அப்பா. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். MRC நகரில் உள்ள திரிவேதியம்மன் கோவிலில் திருமணம் நடந்தது.
சில தினங்களுக்கு முன் அவரை தனியார் நட்சத்திர விடுதியில் சந்தித்தேன். ஆனால் அவர் என்னுடன் பேசவில்லை. மீண்டும் நான் பேச முற்பட்டபோது அவர் என்னை பலர் முன்னிலையில் தாக்கினார்.
மேலும், குழந்தை வேண்டாம் நீ மட்டும் போதும் என ரங்கராஜ் தெரிவித்தார் என அவர் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |