மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரம் .., ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது
பிரபலமான சமையல் கலை வல்லுநரான மாதம்பட்டி ரங்கராஜ் 2019ஆம் ஆண்டு வெளிவந்த மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, ஜாய் கிரிஸில்டாவை மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம் செய்து கொண்டு சமூக வலைதளத்தில் திருமண புகைப்படத்தை பகிர்ந்தனர்.

மாதம்பட்டி ரங்கராஜ் இதனை மறுக்கவே, அவர் தன்னை ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.
மேலும், அவரால் பல முறை கருவுற்று அவரின் வற்புறுத்தலால் கருக்கலைப்பும் செய்திருப்பதாகவும் கூறியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக ஜாய் கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், மாதம் 6,50,000 ரூபாய் பராமரிப்பு செலவு தொகையை ரங்கராஜ் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ஜாய் கிரிசில்டாவுக்கு நேற்றிரவு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        