ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி
Duminy 66 runs in 34 balls vs india champions: இந்தியா சாம்பியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலக சாம்பியன்ஷிப் லெஜெண்ட்ஸ் போட்டியில், தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா சாம்பியன்ஸை வீழ்த்தியது.
ராபின் உத்தப்பா அரைசதம்
ஷார்ஜாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் லெஜெண்ட்ஸ் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
முதலில் ஆடிய இந்தியா சாம்பியன்ஸ் அணியில் அம்பத்தி ராயுடு 19 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அணித்தலைவர் யுவராஜ் சிங் முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார்.
பின்னர் ஸ்டூவர்ட் பின்னி, ராபின் உத்தப்பா கூட்டணி சரவெடி ஆட்டம் ஆடியது. அரைசதம் அடித்த ராபின் உத்தப்பா (Robin Uthappa) 31 பந்துகளில் 77 ஓட்டங்கள் (6 சிக்ஸர், 6 பவுண்டரிகள்) விளாசி வெளியேறினார்.
அணியின் ஸ்கோர் 159 ஆக உயர்ந்தபோது ஸ்டூவர்ட் பின்னி 50 (30) ஓட்டங்கள் (5 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார்.
யூசுப் பதான் 24 ஓட்டங்கள் எடுக்க இந்தியா சாம்பியன்ஸ் அணி 196 ஓட்டங்கள் குவித்தது. வில்ஜோன், இம்ரான் தாஹிர் மற்றும் ஷான் வோன் பெர்க் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
ஜேபி டுமினி வாணவேடிக்கை
அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ரிச்சர்ட் லேவி 24 (12) ஓட்டங்கள் விளாச, அணித்தலைவர் ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட் ஆனார்.

பாப் டூ பிளெஸ்ஸிஸ் 16 பந்துகளில் 20 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, ஜேபி டுமினி வாணவேடிக்கை காட்டினார். மறுமுனையில் கோலின் இங்கரம் சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
அணியின் ஸ்கோர் 168 ஆக உயர, இங்கரம் 40 (24) ஓட்டங்கள் (3 சிக்ஸர், 3 பவுண்டரிகள்) விளாசிய நிலையில் அவுட் ஆனார்.
அரைசதம் விளாசிய ஜேபி டுமினி (JP Duminy) 34 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்கள் விளாசினார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி 18.5 ஓவர்களில் 198 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
