ரூ.26,000 கோடி நிறுவனத்தை விற்று., இந்தியாவின் விலையுயர்ந்த வீட்டை வாங்கிய தொழிலதிபர் யார்?
இந்தியாவின் விலையுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ள நபர், தன்னுடைய பெரும்பாலான வணிகங்களை விற்பனை செய்துள்ளார்.
இந்தியாவின் விலை உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பு
இந்தியாவில் உள்ள சில தொழிலதிபர்கள் தங்கள் வணிகங்களை பல்வேறு வகையில் விரிவுப்படுத்துவார்கள், சிலர் விலையுயர்ந்த சொத்துகளில் தங்களின் முதலீட்டை செய்து லாபத்தை அதிகப்படுத்துவர்.
அந்த வகையில் இந்தியாவின் விலையுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை ஜேபி டபரியா(JP Taparia)என்ற தொழிலதிபர் வாங்கியுள்ளார்.
தெற்கு மும்பை நகரின் மலபார் ஹில் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை ரூ.369 கோடிக்கு டபரியா வாங்கியுள்ளார்.
மலபார் ஹில் இந்தியாவின் அதிக விலைவாசி உள்ள பகுதியாக பார்க்கப்படுகிறது. இப்பகுதியில் அமைந்துள்ள டிரிப்ளெக்ஸ் அபார்ட்மெண்ட் சுமார் 27,160 சதுர அடி பரப்பளவை கொண்டுள்ளது.
அரேபியன் கடலை பார்த்தவாறு கவர்னர் எஸ்டேட் பகுதியின் வாக்கேஷ்வர் சாலை இந்த அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது.
டபரியா இந்த சொகுசு அடுக்குமாடி குடியிருப்புக்கு முத்திரை வரியாக மட்டும் ரூ.19.07 கோடியை டபரியா கட்டியுள்ளார்.
இந்த அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிட வேலைகள் 2026ம் ஆண்டு ஜூன் மாதம் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டபரியா தொழில்
டபரியா குடும்பம் Anantha Capital, Springwel, மற்றும் Guardian Pharmacy ஆகியவற்றில் பங்குகளை கொண்டுள்ளது.
1990ம் ஆண்டு Taparia Famy Care என்ற பெண்கள் சுகாதார பொருட்களின் வணிகத்தை தொடங்கினார், ஆனால் அதனை கடந்த 2015ம் ஆண்டு மைலானுக்கு (Mylan) சுமார் 24,600 கோடிக்கு விற்பனை செய்தார்.
அதைப்போல குடும்ப தொழில்களில் ஒன்றான கண் பராமரிப்பு வணிகத்தை ரூ.2,460 கோடிக்கு Viatris நிறுவனத்திற்கு விற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |