வாக்களித்த பின் உயிரிழந்த இளம் வேட்பாளர் தேர்தலில் வெற்றி
jsp candidate Garapati Divya died after poll but won: ஆந்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், 28 வயதான ஜனசேனா வேட்பாளர் கரபதி திவ்யா வாக்களித்த பின் உயிரிழந்த நிலையில், நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளார்.
வாக்களித்த பின் உயிரிழந்த வேட்பாளர்
ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், ஆளும் தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா, பாஜக கூட்டணி இணைந்து 95%க்கும் மேற்பட்ட இடங்களை வென்றுள்ளது.

கிழக்கு கோதாவரி மாவட்டம், தேவரபள்ளி மண்டலத்தில் உள்ள தூமந்துனிகுடத்தில் ஜனசேன கட்சியின் சார்பில் போட்டியிட்டவர் 28 வயதான கரபதி திவ்யா(Garapati Divya).
பட்டப்படிப்பு முடித்துள்ள கரபதி திவ்யாவிற்கு 3 வயது மகனும், 3 மாத ஆண் குழந்தையும் உள்ளது.
வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் வாக்களித்த பின்னர், வயிற்றுவலி காரணமாக கரபதி திவ்யா அவசரமாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
உடல்நிலை சீராகிவிட்டதாக அவர் வீடு திரும்பிய நிலையில், வெள்ளிக்கிழமை உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
350 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், கரபதி திவ்யா 350க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தேர்தல் வெற்றியால் மகிழ்ச்சியில் நிறைந்திருக்க வேண்டிய அவரது வீடு, இளம் தலைவரை இழந்து கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.