ஜாம்பவான் ரொனால்டோவின் பாரிய சாதனையை தகர்த்தெறிந்த 20 வயது வீரர்!
ரியல் மாட்ரிட் அணி ஜூட் பெல்லிங்ஹாம் போர்த்துக்கல் ஜாம்பவான் ரொனால்டோவின் சாதனையை முறியடித்தார்.
ரொனால்டோவின் சாதனை
போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) தற்போது அல் நஸர் கிளப் அணியில் விளையாடி வருகிறார்.
முன்னதாக ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடியிருந்த அவர், 438 போட்டிகளில் 450 கோல்கள் அடித்திருந்தார். மேலும் அந்த அணியில் இணைந்த பின் முதல் 15 போட்டிகளில் 13 கோல்கள் அடித்து சாதனை படைத்திருந்தார்.
Getty Images
இங்கிலாந்தின் இளம் வீரர்
இந்த நிலையில் ரியல் மாட்ரிட் அணியில் விளையாடி வரும் இங்கிலாந்து வீரரான ஜூட் பெல்லிங்ஹாம், (Jude Bellingham) தனது முதல் 15 போட்டிகளில் 14 கோல்கள் அடித்து ரொனால்டோவின் சாதனையை முறியடித்துள்ளார்.
லா லிகா தொடரில் காடிஸ் (Cadiz) அணிக்கு எதிரான போட்டியில் பெல்லிங்ஹாம் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
இதில் ரொட்ரிகோ (Rodrygo) இரண்டு கோல்கள் (14, 64வது நிமிடங்கள்) அடிக்க, பெல்லிங்ஹாம் ஒரு கோல் (74வது நிமிடம்) அடிக்க ரியல் மாட்ரிட் 3-0 என வெற்றி பெற்றது.
ஜூட் பெல்லிங்ஹாம் Borussia Dortmund அணியில் இருந்து 103 மில்லியன் யூரோக்களுகள் தொகைக்கு ரியல் மாட்ரிடினால் வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |