யூரோ கிண்ணம்... தடை விதிக்கப்பட்ட இங்கிலாந்து நட்சத்திரம்
இங்கிலாந்து கால்பந்து நட்சத்திரம் ஜூட் பெல்லிங்ஹாமை ஒரு போட்டியில் விளையாட UEFA தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோசமான செய்கை
ஸ்லோவாக்கியா அணிக்கு எதிரான போட்டியில் ஜூட் பெல்லிங்ஹாம் மோசமான செய்கை ஒன்றை வெளிப்படுத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையிலேயே UEFA நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனால் சுவிட்சர்லாந்துக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் அவர் களமிறங்க தடையில்லை என்றும் UEFA குறிப்பிட்டுள்ளது. ஸ்லோவாக்கியா அணிக்கு எதிராக கூடுதல் நேரத்தில் கோல் ஒன்றை பதிவு செய்த ஜூட் பெல்லிங்ஹாம்,
30,000 யூரோ அபராதம்
அந்த கொண்டாட்டத்தின் போது, ஸ்லோவாக்கியா அணி வீரர்கள் அமர்ந்திருந்த பகுதி நோக்கி செய்கை ஒன்றை செய்துள்ளார். அது அருவருப்பானது என்றே கூறப்பட்டது.
ஆனால் அது நெருங்கிய நண்பர்கள் மத்தியில் பொதுவானது என்று ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் அளித்திருந்தார். ஆனால் UEFA நிர்வாகம் விசாரணை முன்னெடுத்ததுடன், வெள்ளிக்கிழமை 30,000 யூரோ அபராதமும் விதித்துள்ளது. மேலும், அடுத்த ஓராண்டில் இதுபோன்ற செய்கையில் அவர் ஈடுபட்டால் தடை உறுதி என்றும் எச்சரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |