உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம்
உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல் குறித்து இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கமளித்துள்ளார்.
மெஸ்ஸி - ஜூட் பெல்லிங்ஹாம் வாக்குவாதம்
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதிய நிலையில், 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அட்லாண்டாவின் மெர்சிடிஸ் பென்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் இடையே பல வாக்குவாதங்கள் ஏற்பட்டு போட்டியில் அனல் பறந்தது.

போட்டியின் 4வது நிமிடத்திலேயே அர்ஜென்டினா அணியின் மெஸ்ஸிக்கும், இங்கிலாந்து அணியின் பெல்லிங்ஹாமிற்கும் இடையில் தீவிரமான வாக்குவாதம் ஏற்பட்டது போன்ற காட்சிகள் கேமராவில் பதிவானது.
இது சமூக வலைதளங்களில் பெரிதாக பேசப்பட்ட நிலையில், இது தொடர்பான விளக்கத்தை ஜூட் பெல்லிங்ஹாம் அளித்துள்ளார்.
ஜூட் பெல்லிங்ஹாம் அளித்த விளக்கம்
அதில், “நாங்கள் ஒரு ஃபவுல் குறித்து விவாதித்தோம். அது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. நான் ஃபவுல் நடந்ததாக கருதி பேசினேன்”. அதற்கு பதிலளித்த மெஸ்ஸி “எனக்கு நடந்த ஃபவுலுக்கு என்ன பதில்? என்று கேட்டார்.
அதற்கு அதை தாங்கும் அளவிற்கு நீங்கள் வலுவானவர் என்று மெஸ்ஸிக்கு நான் பதிலளித்தேன் என்று தெரிவித்துள்ளார்.
what did Bellingham tell Messi?😭💀 pic.twitter.com/1pi5NkR61x
— BLAKE 𖤍 (@Am__Blake) July 16, 2026
மேலும் மெஸ்ஸியுடன் விளையாடியது எனக்கு கிடைத்த பெருமை, எங்களுக்குள் எந்தவொரு கசப்புணர்வும் இல்லை என்று விளக்கமளித்துள்ளார்.
அத்துடன் அரையிறுதிப் போட்டியில் வெளியேறியதை தொடர்ந்து, இங்கிலாந்து கால்பந்து ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
அதில், இங்கிலாந்து அணிக்காக உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் மீண்டும் அதே ஏமாற்றமான செய்தியை ரசிகர்களுக்கு சொல்வது வருத்தமளிப்பதாக உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |