உயர்நீதிமன்றத்தை விட தன்னை பெரிய ஆள் என நடிகர் விஷால் நினைக்க வேண்டாம்! நீதிபதி காட்டம்
நடிகர் விஷால் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக்கூடாது என உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேல்முறையீடு தாக்கல்
லைக்கா நிறுவனம் நடிகர் விஷால் மீது தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்ற கணக்கில் அவர் 15 கோடியை செலுத்த வேண்டும் மற்றும் சொத்து, வங்கி கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து விஷால் மேல்முறையீடு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள், 15 கோடி பணத்தை செலுத்தாவிட்டால் விஷால் தயாரிக்கும் படங்களை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 19ஆம் திகதி வழக்கு விசாரணையில் விஷால் தரப்பில் விவரங்கள் தாக்கல் செய்யப்படாததுடன், அவரது வழக்கறிஞர் ஆஜராகவில்லை.
இதனால் விஷால் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று விஷால் நீதிபதி முன்பு நேரில் ஆஜரானார்.
அப்போது '19ஆம் திகதிற்குள் சொத்து ஆவணங்கள், வங்கி கணக்குகளை தாக்கல் செய்யாததால், விஷால் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக்கூடாது? இந்த நீதிமன்றத்தை விட விஷால் தன்னை பெரிய ஆள் என்று நினைக்க வேண்டாம். அனைவரையும் போல தான் விஷாலையும் நீதிமன்றம் கருதும். நீதிமன்றத்தின் முன்பு அனைவரும் சமம் தான்' என காட்டமாக தெரிவித்தார்.
விஷால் தரப்பு விளக்கம்
இதனைத் தொடர்ந்து விஷால் தரப்பில், வங்கியில் இருந்து ஆவணங்களை பெற தாமதம் ஆகிவிட்டது, எனினும் ஒன்லைன் வாயிலாக தாக்கல் செய்யப்பட்டது என கூறப்பட்டது.
அதனை ஏற்க மறுத்த நீதிபதி , விஷால் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்த நீதிமன்றம் மீதான மரியாதையை நானே தாழ்த்திவிட்டதாகிவிடும் என்று கூறினார்.
அதற்கு விஷால் தரப்பில் ஆவணங்கள் டஹ்க்கள் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் விஷால் தந்தையின் தொழில் நஷ்டத்தினால் வீட்டுக்கடனை செலுத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.
அத்துடன் அவருக்கு தொடர் படப்பிடிப்பு உள்ளதால் நேரில் ஆஜராகி விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வருகிற 25ஆம் திகதி விசாரணையை நீதிபதி தள்ளி வைப்பதாக கூறினார். அத்துடன் நேரில் ஆஜராக விஷாலுக்கு விலக்கு அளித்ததுடன் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |