தமிழ்நாடு அரசிடமிருந்து ஊதியம் வேண்டாம் எனக் கூறிய முன்னாள் நீதிபதி
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒன்றிய, மாநில அரசுகளின் உறவுகள், அதிகாரங்கள் குறித்து ஆய்வு செய்ய ஊதியம் வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று 110வது விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதாவது, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை பாதுகாக்கவும், வலுப்படுத்தவும் உயர்நிலை குழு ஒன்று அமைக்கப்படுகிறது. இந்த குழுவிற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமை வகிக்கிறார்.
இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து நீதிபதி குரியன் ஜோசப் தமிழ்நாடு அரசிடம் ஊதியம் பெறப்போவதில்லை என கூறியுள்ளார்.
பெருமையாக கருதுகிறேன்
இதுதொடர்பாக அவர் கூறுகையில், "தமிழ்நாடு அரசின் இந்த முயற்சி வரவேற்புக்குரியது. மத்திய-மாநில உறவுகள் குறித்து ஆராய, அவ்வப்போது இத்தகைய குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசின் மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் இந்த நடவடிக்கைக்கு முழு ஆதரவு தருவோம்.

சாட்டை துரைமுருகன் யூடியூப் சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை: சீமான் அறிவிப்பு
இந்த ஆய்வினை செய்வது காலத்தின் கட்டாயம். இதற்கு என்னை தெரிவு செய்ததை பெருமையாக கருதுகிறேன்.
இந்த குழுவின் தலைவராக செயல்படுவதற்காக நான் ஊதியம் பெறமாட்டேன். இதனை முதலமைச்சர் ஸ்டாலினிடம் வேண்டுகோளாக முன்வைத்தேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டார்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |