விபத்தை ஏற்படுத்திய நீதிபதியின் மகன்: தந்தை மீது வழக்கு
Son rams Mercedes into scooter, kills rider in Kochi, judge booked: நீதிபதி ஒருவருடைய மகன் ஏற்படுத்திய விபத்து உயிர் பலி வாங்கியதால், தந்தை மீது வழக்கு.
கேரளாவிலுள்ள சேரநல்லூர் என்னுமிடத்தில், நேற்று அதிகாலை 2.00 மணிக்கு மேல், தன் உணவகத்தை மூடிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்திருக்கிறார் ஜெய பாலகிருஷ்ணன் (55).
விபத்தை ஏற்படுத்திய நீதிபதியின் மகன்
அப்போது வேகமாக வந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒன்று பாலகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிள் மீது பின்னாலிருந்து மோத, தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

காரை ஓட்டியவர் நீதிபதி ஒருவரின் மகன். அவரைக் கைது செய்த பொலிசார் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளார்கள்.
பின்னர் அந்த இளைஞர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தந்தை மீது வழக்கு
அதைத் தொடர்ந்து, பாலகிருஷ்ணனின் மகள், தனக்கு பொலிசார் மீது நம்பிக்கை இல்லை என்றும், தன் தந்தையின் மரணத்துக்குக் காரணமான அந்த இளைஞரையும் அவரது தந்தையான நீதிபதியையும் தப்ப விடமாட்டேன் என ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

இந்நிலையில், விபத்தை ஏற்படுத்தியவர் 18 வயதுக்குக் கீழுள்ளவர் என்பதால், அவரது தந்தை மீது வழக்குத் தொடர கேரள உயர்நீதிமன்றத்தில் பொலிசார் அனுமதி கோர, உயர்நீதிமன்றம் அந்த நீதிபதி மீது வழக்குத் தொடர அனுமதியளித்துள்ளது.