நடிகை வழக்கில் தீர்ப்பளிக்க நீதிபதி உத்தரவு: ட்ரம்ப் சிறை செல்வாரா?
நடிகை ஒருவருடனான தவறான உறவை மறைக்க, அவருக்கு ட்ரம்ப் தரப்பில் பணம் கொடுத்தது தொடர்பிலான வழக்கு ஒன்றில் தீர்ப்பளிக்க நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
என்ன வழக்கு?
2016ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரங்களின்போது, மோசமான படங்களில் நடிக்கும் நடிகையான ஸ்டார்மி டேனியல்ஸ் என்னும் இளம்பெண்ணுடன் ட்ரம்புக்கு உறவு இருந்ததாகவும், அதை மறைக்க, அதாவது, அந்தப் பெண்ணின் வாயை அடைக்க அவருக்கு 130,000 டொலர்கள் பணம் கொடுக்கப்பட்டதாகவும் அந்தப் பெண் கூறிய விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உண்மையில் அப்படி பணம் கொடுப்பது அமெரிக்கச் சட்டப்படி குற்றமில்லை. என்றாலும், அந்த விடயத்தை மறைப்பதற்காக, அது தொடர்பான போலியான ஆவணங்களை ட்ரம்ப் உருவாக்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
ட்ரம்ப் சிறை செல்வாரா?
இம்மாதம், அதாவது, ஜனவரி மாதம் 20ஆம் திகதி ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள நிலையில், சரியாக அதற்கு 10 நாட்களுக்கு முன், அதாவது, ஜனவரி மாதம் 10ஆம் திகதி, அந்த வழக்கில் தீர்ப்பளிக்க Juan Merchan என்னும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்க இருக்கும் நேரத்தில் இப்படி ஒரு சம்பவம் நிகழ இருப்பது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ட்ரம்ப், இது தன் மீதான சட்டவிரோத அரசியல் தாக்குதல் என விமர்சித்துள்ளார்.
இந்த வழக்கில் ட்ரம்ப் சிறை செல்லப்போவதில்லை. என்றாலும், குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டவராகத்தான் அவர் வெள்ளை மாளிகைக்குள் செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |