சட்டத்தால் பிரித்துவைக்கப்பட்டிருந்த காதலர்கள்... பிரதமரின் உத்தரவையே மாற்ற அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ள நீதிபதி
பிரான்சின் சட்டத்துறையின் உச்ச அமைப்பான பிரெஞ்சு மாகாண கவுன்சில் நீதிபதி ஒருவர் சட்டத்தால் பிரித்துவைக்கப்பட்டிருந்த காதலர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்கள், தங்கள் காதலர் அல்லது காதலி பிரான்சில் வசிக்கும் பட்சத்தில், அவர்களை திருமணம் செய்வதற்காக தங்களை பிரான்சுக்குள் அனுமதிக்கவேண்டும் என கோரி பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் #LoveIsNotTourism & #LoveIsEssential என்ற ஹேஷ்டேகைத் துவக்கி, தீவிர பிரச்சாரம் ஒன்றை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து வேறு வழியில்லாமல் பிரான்ஸ் காதலர்களுக்காக தனது நாட்டு எல்லையைத் திறந்துவிட்டது.
ஆனால், எல்லையைத் திறந்தாலும், வேண்டுமென்றே தேவையில்லாத ஆவணங்களைக் கேட்டு காதலர்களை சந்திக்கவிடாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிவந்தது பிரான்ஸ்.
ஆகவே, பிரெஞ்சு குடிமக்களைக் கொண்ட ஒரு குழு, பிரெஞ்சு மாகாண கவுன்சில் நீதிபதி ஒருவரிடம், பிரெஞ்சு குடிமகன் அல்லது குடிமகளை மணப்பதும் கட்டாயக் காரணங்களில் ஒன்றுதான் என அறிவித்து, விசா பெறுவதில் இருக்கும் நடைகுறை பிரச்சினைகளை தீர்க்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொண்டது.
அதேபோல், இந்த குறிப்பிட்ட பிரச்சினையால் விசா கிடைக்காமல் தன் துணையைப் பிரிந்திருந்த ஒருவர், தாங்கள் பல மாதங்கள் பிரிந்திருப்பதாகவும், குடும்ப வாழ்க்கையில் ஈடுபட முடியாமல் கஷ்டப்படுவதாகவும் கூறி, 4,000 யூரோக்கள் நஷ்ட ஈடு கோரியிருந்தார்.
வழக்கில் தம்பதியருக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிபதி, மணமக்களை சந்திக்க விடாதபடி தடை செய்யும் பிரதமரின் உத்தரவு ஒன்றையே ரத்து செய்து உத்தரவிட்டதுடன், பாதிக்கப்பட்ட தம்பதிக்கு 4,000 4,000 யூரோக்கள் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
பிரான்சில் வாழும் பிரெஞ்சுக் குடிமக்களை மணம் முடிக்கும் ஐரோப்பிய
ஒன்றியத்தாரல்லாதவர்களின் விசாக்களை முறைப்படி பதிவு செய்து விசாரிக்குமாறு
தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு, உள்துறை அமைச்சருக்கு உத்தரவிடப்படுவதாக,
நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.