மேக்ரான் மனைவியை அவமதித்த பெண் வழக்கு: கைவிரித்த நீதிமன்றம்
A judge ruled that French President Emmanuel Macron and his wife, Brigitte, could not continue their defamation lawsuit against Candace Owens: பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானுடைய மனைவியை அவமதித்த பெண் வழக்கில் அந்தப் பெண்ணுக்கு எதிரான வழக்கை தொடர முடியாது என நீதிமன்றம் ஒன்று கூறிவிட்டது.
பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானுடைய மனைவி, ஆணாகப் பிறந்தவர் என்று கூறி அவரை அவமதிக்கும் வகையில் பேசுவதையே வழக்கமாகக் கொண்டவர் அமெரிக்கப் பெண்ணான கேண்டேஸ் ஓவன்ஸ்.
மேக்ரான் மனைவியை ஆண் என விமர்சிக்கும் பெண்
கேண்டேஸ் ஓவன்ஸ் (Candace Owens) என்னும் அமெரிக்கப் பெண், ஒரு தொலைக்காட்சி பிரபலம் மற்றும் அரசியல் விமர்சகரும் ஆவார்.

இந்த கேண்டேஸ், மேக்ரானின் மனைவியான பிரிஜிட் மேக்ரானை கேலி பேசுவதையே வழக்கமாகக் கொண்டவர்.
குறிப்பாக, பிரிஜிட் பெண் அல்ல, அவர் ஆணாகப் பிறந்தவர், அவர் ஒரு திருநங்கை என கேண்டேஸ் கூறுவதுண்டு. அதற்காகவே ’Becoming Brigitte’ என்னும் பெயரில் எட்டு பாகங்கள் கொண்ட போட்காஸ்ட் ஒன்றை நடத்தினார் இந்த கேண்டேஸ் ஓவன்ஸ்.
வழக்கு தொடர்ந்த மேக்ரான் தம்பதியர்
இந்நிலையில், கேண்டேஸ் ஓவன்ஸ் மீது அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்கள் மேக்ரான் தம்பதியர்.

அப்படியிருந்தும், இது ஒன்றும் பிரான்ஸ் அல்ல, இது அமெரிக்கா. மேக்ரான் தம்பதியர் நினைத்ததையெல்லாம் இங்கு செய்யமுடியாது என்று கூறியிருந்தார் கேண்டேஸ் ஓவன்ஸ்.
கைவிரித்த நீதிமன்றம்
கேண்டேஸ் ஓவன்ஸ் கூறியதுபோலவே, அவருக்கு எதிரான வழக்கை மேக்ரான் தம்பதியர் தொடரமுடியாது என்று கூறிவிட்டது டெலாவேர் நீதிமன்றம்.
மேக்ரான் தம்பதியர், கேண்டேஸ் ஓவன்ஸ் மீதும், அவருக்கு சொந்தமான இரண்டு நிறுவனங்கள் மீதும் வழக்குத் தொடர்ந்திருந்த நிலையில், அவரது நிறுவனங்கள் மீதான வழக்கை வேண்டுமானால் மேக்ரான் தரப்பு தொடரலாம் என்றும், கேண்டேஸ் ஓவன்ஸ் மீதான வழக்கை அவர்கள் தொடர்ந்து நடத்த முடியாது என்றும் டெலாவேர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் கூறிவிட்டார்.
அதாவது, கேண்டேஸ் ஓவன்ஸ் டென்னஸ்ஸியில் வாழ்வதாகவும், அதனால் அவர்கள் மீதான வழக்கை டெலாவேர் நீதிமன்றத்தில் மேக்ரான் தம்பதியர் தொடரமுடியாது என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
என்றாலும், கேண்டேஸ் ஓவன்ஸுக்கு சொந்தமான இரண்டு நிறுவனங்களும் டெலாவேரில் உள்ளதால், அவற்றின் மீதான வழக்கை மேக்ரான் தரப்பு தொடர்ந்து நடத்தலாம் என்றும் அந்த நீதிபதி கூறியுள்ளார்.
இந்நிலையில், அந்த நீதிபதிக்கு கேண்டேஸ் ஓவன்ஸ் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.
இது ஒரு மோசமான வழக்கு என்று கூறியுள்ள கேண்டேஸ் ஓவன்ஸ், பதவியில் இருக்கும் ஒரு ஜனாதிபதி, தான் ஆளும் நாட்டிற்கு வெளியே உள்ள ஒறை பாட்காஸ்டர் ஒருவரை தனிப்பட்ட முறையில் திவாலாக்க முயற்சிக்கும் இந்த வழக்கு, மனித வரலாற்றில் ஒரு வெளிநாட்டு அரசின் தலைவரால் செய்யப்பட்ட மிக மோசமான சட்ட மீறல்களில் ஒன்றாகும் என்றும் கூறியுள்ளார்.