கஸ்தூரியின் சிறப்பு குழந்தை நிலையை வைத்து ஜாமீன் முடிவை எடுங்க.., நீதிபதியின் மனைவி வேண்டுகோள்
நடிகை கஸ்தூரி ஜாமீன் விவகாரத்தில் அவரது சிறப்பு குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு கருணையோடு முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிபதியின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேண்டுகோள்
உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதியாக இருப்பவர் ஜி.ஆர்.சுவாமிநாதன். இவரது மனைவி காமாட்சி சுவாமிநாதன், சக்ஷம் (மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பு) என்ற அமைப்பின் அகில இந்திய துணைத் தலைவராக உள்ளார்.
இவர், நடிகை கஸ்தூரி தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை கஸ்தூரியின் குழந்தைக்காக ஒரு கோரிக்கை. குற்றவியல் வழக்கிற்கு நான் கருத்து தெரிவிப்பது சரியானது அல்ல.
ஆனால், கஸ்தூரிக்கு ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட குழந்தை இருக்கிறது என்பதை நான் அறிந்தேன். அந்த குழந்தையை வளர்ப்பதில் அவர் தனி ஆளாக போராடி வருகிறார்.
இந்த மாதிரியான குழந்தைகளின் பெற்றோருக்கு அன்றாட வாழ்க்கையை கடப்பதே பெரிய விடயம் தான். நானும் கஸ்தூரியைப் போல ஒரு சிறப்பு அம்மாதான் (Special Mother). எனக்கும் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மகன் இருக்கிறான்.
இதனால், கஸ்தூரி ஜாமீன் விடயத்தில் நீதிமன்றங்கள் அவரது குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு கருணையோடு அணுக வேண்டுமென எதிர்பார்க்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |