மணிக்கு 111 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்த இளைஞர்: விநோத காரணத்தை ஏற்க மறுத்த நீதிபதி
சுவிட்சர்லாந்தில், மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கவேண்டிய சாலையில், மணிக்கு 111 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்த இளைஞர் ஒருவர் பொலிசாரிடம் சிக்கினார்.
கமெராவால் சிக்கிய இளைஞர்
19 வயது இளைஞர் ஒருவர், Vaud மாகாணத்தில் மணிக்கு 111 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்த காட்சி ஒன்று போக்குவரத்து பொலிசாரின் கமெராவில் பதிவானது.
அவர் முழுமையாக ஓட்டுநர் உரிமம் பெறவில்லை, வெறும் learners’ permit மட்டுமே வைத்திருந்தார். ஆகவே, பொலிசார் அவரது உரிமத்தைப் பறித்ததுடன், மீண்டும் அவர் விதி மீறலில் ஈடுபட்டால் ஓரண்டு சிறை செல்லும் வகையில் அவருக்கு தண்டனையும் அறிவிக்கப்பட்டது.
தண்டனையை எதிர்த்து நீதிமன்றம் சென்ற இளைஞர்
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து நீதிமன்றம் சென்றார் அந்த இளைஞர். உள்ளூர் நீதிமன்றம், Vaud மாகாண நீதிமன்றம் என எங்கும் அவரது வாதம் எடுபடாத நிலையில், கடைசியாக பெடரல் நீதிமன்றத்துக்கே சென்றுவிட்டார் அவர்.
தான் வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும்போது, திடீரென தனக்குத் தும்மல் வந்ததாகவும், தும்மும்போது தெரியாமல் கால் ஆக்சிலரேட்டரை அழுத்தி கார் வேகமாக சென்றுவிட்டது என்றும் கூறியுள்ளார்.
ஆனால், பெடரல் நீதிமன்ற நீதிபதிகளும் அவரது வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |