பிரான்ஸ் ஜனாதிபதி போட்டிக்கு தயாராகும் விளையாட்டு வீரர்: வெற்றி கிடைக்குமா?
Judo legend Teddy Riner's presidential bid faces a tough fight in France: ஜூடோ சேம்பியனான டெடி ரைனர் பிரான்சில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட உள்ள நிலையில், அவர் கடுமையான சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.
ஒலிம்பிக் போட்டிகளில், ஜூடோ விளையாட்டில் சேம்பியன் பட்டம் பெற்றவரான டெடி ரைனர் (Teddy Riner, 37), என்பவர், பிரான்ஸ் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.

ஆனால், அவர் கடுமையான சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்!
கடுமையான சவால்கள்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தன் கல்லூரி நாட்களில் ஒரு தடகளவீரர், ரொனால்ட் ரீகனும் அப்படித்தான்.
அந்த வரிசையில் அர்னால்ட் ஸ்வார்ஸ்நெகர், Jesse Ventura, Bill Bradley, Jack Kemp என விளையாட்டு வீரர்களாக இருந்து அரசியல்வாதிகளானவர்கள் பலர் இருக்கிறார்கள்.
உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமி ஜெலன்ஸ்கி, ஒரு முன்னாள் நடிகர், நகைச்சுவையாளர்.
ஆனால், அவர்கள் பிரான்சைச் சேர்ந்தவர்கள் அல்ல என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
அதாவது, விளையாட்டு வீரர் ஒருவர் பிரான்சில் ஜனாதிபதியாவது கடினம் என்கிறார்கள் அவர்கள்.

ஆக, ஜூடோ விளையாட்டில் தன்னை எதிர்த்தவர்களை வென்ற டெடி ரைனர், பிரான்ஸ் அரசியலில் வெற்றி பெற கடுமையான சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்கிறார்கள் அவர்கள்.
பிரான்ஸ் மக்கள், தங்களை ஆள்பவர்கள் அரசியல் அனுபவம் உடையவர்களாக இருக்கவேண்டும் என்னும் எண்ணம் கொண்டவர்கள். ரைனருக்கோ, அரசியல் அனுபவமே கிடையாது.
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், ஒருவர் பிரான்சில் தேர்தலின் முதல் சுற்றில் போட்டியிட வேண்டுமானால், அவரை, மேயர்கள், கவுன்சிலர்கள் போன்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 பேர் ஸ்பான்சர் செய்யவேண்டும்.
ஆனால், ரைனருக்கு எத்தனை பேர் ஆதரவளிப்பார்கள் என்பது இப்போதைக்கு ஒரு பெரிய கேள்விக்குறி!
அத்துடன், நேற்று தனது முதல் பிரச்சாரத்தை துவக்கியுள்ளார் ரைனர். ஆனால், அவரது கொள்கைகள் என்ன என்பதை அவர் தெளிபடுத்தவில்லை.
பிரான்சில் தான் மக்களிடையே பயத்தையும், கோபத்தையும் சமூகப் பிரிவினைகளையும் பார்ப்பதாகவும், எதிர்காலத்தை கற்பனை செய்ய முடியாத நிலை அவர்களுக்கு உள்ளதாகவும் தன் உரையில் சுட்டிக்காட்டினார் ரைனர்.
ஆனால், அவர் அதற்கு என்ன தீர்வு வைத்துள்ளார் என்பதையோ, அவரது செயல் திட்டங்கள் என்ன என்பதையோ ரைனர் விளக்கவில்லை.

ரைனர் எதிர்த்து நிற்பவர்களோ சாதாரண ஆட்கள் அல்ல. அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட, தீவிர வலது சாரியினரான மரீன் லெ பென்னும் தீவிர இடதுசாரித் தலைவரான ஜீன்-லூக் மெலென்சோனும் களத்திலிருக்கிறார்கள்.
மேலும் ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், மற்ற வேட்பாளர்கள் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகள் கொண்டவர்கள், ரைனரோ கருப்பினத்தவர் என்பதால் அவர் பலரை ஈர்க்கலாம்.
ஆனால், அந்த ஆதரவு வாக்குகளாக மாறுமா என்று கேட்கும் அரசியல் நிபுணர் ஒருவர், சொல்லப்போனால், சிலருக்கு ரைனரின் நிறமே ஒரு அரசியல் பிரச்சினையாக தோன்றலாம் என்கிறார்.
ஆக, விளையாட்டில் வெற்றிகளைக் குவித்த ரைனர், பிரான்ஸ் அரசியலில் மக்கள் மனதை வென்று ஜனாதிபதியாகவேண்டுமானால், அதற்கு அவர் ஜூடோ விளையாட்டு வீரர்களை விட வலிமையான பல விடங்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.