ஜூஸ் போத்தல் முழுவதும் அச்சிடப்பட்டுள்ள அந்த வார்த்தைகள்... பிரான்சில் பொலிஸ் புகாரையடுத்து நடவடிக்கை
உலகம் முழுவதும் இது கெட்ட வார்த்தைகளின் சீஸனோ என எண்ணவைக்கிறது வெளியாகும் செய்திகள்...
கனடாவில் என்னவென்றால் பிரதமரையும் அவரது மனைவியையும் கெட்ட வார்த்தைகளால் விமர்சிக்கிறார்கள். பிரான்சில் என்னவென்றால் ஒரு ஜூஸ் போத்தல் முழுவதும் கெட்ட வார்த்தைகளால் நிறைந்துள்ளது.
அதுவும் பொலிசாரை திட்டும் கெட்ட வார்த்தைகள் அந்த போத்தலில் எழுதப்பட்டுள்ளதால் பொலிசாரே அதைக் குறித்து புகாரளித்துள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், பிரான்ஸ் பள்ளிப் பிள்ளைகளை குறிவைத்து ஒரு ஜூஸ் விற்பனை செய்யப்படுகிறது. அந்த ஜூஸ் போத்தலைப் பார்த்த பிள்ளைகளின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
Interesting back to school supermarket juice for kids (zoom in) ? pic.twitter.com/qE41mRT5OR
— Claire Waddington (@clairewad) September 10, 2021
ஆம், முழுவதும் நிர்வாணம், பாலுறவு, பள்ளிக்கு திரும்புவது அருவருப்பு என்பது போன்ற வார்த்தைகள் அந்த போத்தலில் அச்சிடப்பட்டுள்ளன.
எல்லாம்போக, எல்லா பொலிசாரும் மோசமான வழியில் பிறந்தவர்கள் என்று வேறு அந்த போத்தலில் குறிப்பிடப்பட்டிருக்க, பொலிசாருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. அவர்கள் இது குறித்து புகார் செய்துள்ளார்கள்.
ஜூஸ் தயாரிப்பு நிறுவனம் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், பிரெஞ்சு பல்பொருள் அங்காடிகள் சில, இந்த ஜூஸை தனது ஷெல்ஃப்களிலிருந்து அகற்றுவதாக தெரிவித்துள்ளன.
ஏற்கனவே பிரான்சில் பொலிசாருக்கும் இளைஞர்களுக்கும் மோதல் போக்கு காணப்படும் நிலையில், இப்படி வெறுப்பைத் தூண்டும் வாசகங்கள் இளைஞர்களை மேலும் தூண்டலாம், அதனால் அந்த ஜூஸை விற்கப்போவதில்லை என பல்பொருள் அங்காடிகள் தெரிவித்துள்ளன.