மலச்சிக்கல் பிரச்சினையா? இந்த 7 ஜூஸ்ல ஒன்றை குடிங்க போதும்!
மலச்சிக்கல் பிரச்சனை ஆனது, நம்மில் பலரும் எதிர்கொள்ளக் கூடிய மிகவும் பொதுவான ஒன்றாகும்.
இதனால் வழக்கமான குடல் அசைவுகளில் சிரமம் ஏற்படுகிறது. பல காரணங்களால் தினசரி ஆரோக்கியமான குடல் இயக்கத்தை பராமரிப்பதில் ஒருவருக்கு சிரமம் ஏற்படலாம்.
இருப்பினும் மலச்சிக்கல் ஏற்படுவதற்கு உண்ணும் உணவுகளும், பழக்கவழக்கங்களும் தான் காரணம். ஒருவர் உடலுக்கு உழைப்பு ஏதும் கொடுக்காமல் உண்பது, உட்கார்ந்து வேலை செய்வது என்று இருந்தால், உணவுகள் சரியாக செரிமானமாகாமல், நாளடைவில் அது மலச்சிக்கலை உண்டாக்கும்.
மேலும், உங்களின் உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் நீங்கள் அதிலிருந்து விடுபடலாம். இதற்கு சில இயற்கை ஜூஸ் பெரிதும் உதவுகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை அறிந்து கொள்வோம்.
ஆப்பிள் ஜூஸ்
ஆப்பிள் விதைகள் நீக்கியது - 1 பெருஞ்சீரகம் பொடி - அரை டீஸ்பூன் தண்ணீர் - அரை கப் ஆப்பிளை நறுக்கி ப்ளெண்டரில் சேர்த்து மசிக்கவும். இதை டம்ளரில் ஊற்றி பெருஞ்சீரகப் பொடியை சேர்த்து நன்றாக கிளறவும்.
திராட்சை சாறு
கருப்பு திராட்சை - அரை கப் இஞ்சி - சிறு துண்டு அளவு கருப்பு உப்பு - ருசிக்கேற்ப தண்ணீர் - தேவைக்கேற்ப செய்முறை சுத்தம் செய்த திராட்சையின் விதையை நீக்கி சாறை எடுக்கவும். பிறகு ப்ளெண்டரில் திராட்சை, நறூக்கிய இஞ்சி மற்றும் தண்ணீர் சேர்க்கவும். இதை மசித்து வடிகட்டாமல் டம்ளரில் ஊற்றவும். பிறகு தேவைக்கேற்ப கருப்பு உப்பு சேர்த்து கொடுக்கவும்.
ஆரஞ்சு சாறு
ஆரஞ்சு சுளை - 1 கப் கருப்பு உப்பு - சிட்டிகை ஆரஞ்சுசுளைகளை ப்ளெண்டரில் சேர்த்து அரையுங்கள். விதைகளை வெளியேற்றிவிடுங்கள். இந்த சாற்றை கண்ணாடி டம்ளரில் விட்டு சிட்டிகை கருப்பு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
பேரிக்காய் சாறு
பேரிக்காய் - 2 (விதைகள் நீக்கியது) எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன் கருப்பு உப்பு - 1 சிட்டிகை பேரிக்காயை நறுக்கி விதைகள் நீக்கி ப்ளெண்டரில் அரைத்து எடுக்கவும். இதை மசித்து இதன் சாற்றை கண்ணாடிக்குள் ஊற்றவும். எலுமிச்சை சாறு மற்றும் சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலந்து எடுக்கவும்.
ப்ரூனே சாறு
கொடி முந்திரி என்று சொல்லப்படும் ப்ரூனே பழங்கள் - 6 தேன் - அரை டீஸ்பூன் சீரகத்தூள் - அரை டீஸ்பூன் வெதுவெதுப்பான நீர் - 1 கப் ப்ரூனே பழத்தை வெதுவெதுப்பான நீரில் ஊறவைக்கவும். சில நிமிடங்கள் கழித்து மென்மையாகும் போது அதில் இருக்கும் விதைகள் வெளியேற்றி தண்ணீர் சேர்த்து ப்ளெண்டரில் அரைத்துவிடுங்கள். பிறகு தேன் மற்றும் சீரக தூள் சேர்க்கவும். இதை நன்றாக கலந்து குடிக்கவும்.
செர்ரி சாறு
செர்ரி பழம் - 1 கப் எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன் தண்ணீர் - அரை கப் கருப்பு உப்பு - ருசிக்கேற்ப செர்ரிபழம் கழுவி விதைகளை அகற்றவும். இதில் செர்ரி சேர்த்து ப்ளெண்டரில் அரைக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து ருசிக்கு உப்பு சேர்த்து கலந்து விடவும். செர்ரிகளில் பாலிபினால்கள் நீர் மற்றும் நார்ச்சத்து உள்ளது.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறு நீர்த்தது - 1 கப்
வெதுவெதுப்பான நீர் - 1 கப்
தேன் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, தேன் மற்றும் சீரகத்தூள் சேர்க்கவும். இதை நன்றாக கலந்து டம்ளரில் ஊற்றி குடிக்கவும். எலுமிச்சையில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது.