எச்சரிக்கையுடன் 'ஜூலை-19' தளர்வுகளை உறுதி செய்த பிரதமர் போரிஸ் ஜான்சன்!
பிரித்தானியாவில் வரும் திங்கட்கிழமை முதல் பெரும்பாலான கோவிட் சட்டங்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கான திட்டங்களை பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதி செய்தார்.
திங்கட்கிழமை மாலை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன், 'Freedom Day' என அழைக்கப்படும் ஜுலே 19-ஆம் திகதி முதல் ஊரடங்கை தளர்த்துவது உறுதி என அறிவித்தார். ஆனால், தொடர்ந்து சில கட்டுப்பாடுகள் தேவை என கடுமையாக எச்சரித்துள்ளார்.
தொற்று எண்ணிக்கை மற்றும் மருத்துவமனை சேர்க்கைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதால், சில கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு நாட்களை குறிக்க முடியாது என கூறினார்.
அதனால், சில புதிய கொரோனா வைரஸ் வழிகாட்டலை அரசாங்கம் வெளியிட உள்ளது.
புதிய அரசாங்க வழிகாட்டுதல், தனிநபர்கள் நெரிசலான இடங்களில் முகக்கவசங்களை அணிந்துகொள்வதை 'எதிர்பார்க்கிறது மற்றும் பரிந்துரைக்கப்படுகிறது'.
முகக்கவசங்கள் இனி கட்டாயம் இல்லை. ஆனால், அலுவலகங்கள் அதனை கட்டாயமாக்குவதற்கு அனுமதி உள்ளது.
பொதுவாக எந்த இடத்திலும் தடுப்பூசி கடவுச்சீட்டு அவசியம் இல்லை. ஆனால், அதனை அவசியமாக்குவது அந்தந்த இடங்களை பொறுத்தது.
பார், பப் போன்ற இடங்களில் நுழைய QR Code ஸ்கேன் செய்ய வேண்டியது இல்லை.
பொது இடங்களில் 6 பேர் மட்டுமே கூடவேண்டும் என்கிற சட்டம் தகர்க்கப்பட்டது. இனி அளவில்லாமல் எப்போதும் போல எத்தனை பேர் வேண்டுமானாலும் கூடலாம்.
ஒரு மீற்றர் இடைவெளியும் அவசியம் இல்லை. அது அவரவர் தனிப்பட்ட விருப்பம்.
திருமணம், மரணம் போன்ற நிகழ்வுகளில் அளவில்லாமல் எத்தனை பேர் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்.
ஒர்க் ஃபிரம் ஹோம் தேவையில்லை. ஆனால் நிறுவங்கள் விரும்பினால் அதனை தொடர்ந்து கடைபிடிக்கலாம்.
இரவு நேர விடுதிகள் திறக்கப்படலாம் - நேர கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை.
அரங்குகள், மைதானங்கள் போன்ற வெகுஜன இடங்களில் எத்தை பேர் வேண்டுமானாலும் அனுமதிக்கப்படலாம்.
பராமரிப்பு இல்லங்களில் அளவின்றி உறவினர்களை அனுமதிக்கலாம்.