டி20யில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் அமீரக வீரர்! பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சாதனை
ஐக்கிய அரபு அமீரக அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் சித்திக் டி20யில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஜுனைத் சித்திக்
ஷார்ஜாவில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
கடந்த 4ஆம் திகதி நடந்த ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் பாகிஸ்தானின் சைம் அயூப்பின் விக்கெட்டை ஜுனைத் சித்திக் (Junaid Siddique) வீழ்த்தினார். இது அவரது 100வது விக்கெட் ஆகும்.
இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஐக்கிய அரபு அமீரக வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
அவருக்கு அடுத்த இடங்களில் ஜஹூர் கான் (72), ரோஹன் முஸ்தபா (61), முகமது ஜவாதுல்லா (54), அலி நஸீர் (51) ஆகியோர் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |