ஜூன் மாத ராசி பலன் 2021 : பேரதிர்ஷ்டங்களை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்?

Horoscope Rasi Palan
By Kishanthini Jun 01, 2021 03:58 AM GMT
Report
Courtesy: oneindia

ஜூன் மாதத்தில் சூரியன் ரிஷபம் மற்றும் மிதுனம் ராசிகளில் பயணம் செய்கிறார். இந்த மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் மிதுன ராசியில் வக்ரம் அடைந்த புதன், செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிக்க விருச்சிக ராசியில் கேது, மகர ராசியில் வக்ரமடைந்த சனி, கும்ப ராசியில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

கிரகங்களின் இடமாற்றத்தை பார்த்தால் ஜூன் 2ஆம் தேதி கடக ராசியில் நீசமடைந்து பயணம் செய்கிறார்.

புதன் ரிஷப ராசிக்கு நகர்கிறார். ஜூன் 15ஆம் தேதி சூரியன் மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

ஜூன் 20ஆம் தேதி குரு வக்ர ஆரம்பமாகிறது. ஜூன் 22ஆம் தேதி புதன் வக்ர சஞ்சாரம் முடிகிறது. சுக்கிரன் இடப்பெயர்ச்சியாகி நீசம் பெற்ற செவ்வாய் உடன் இணைகிறார். இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சி சஞ்சாரத்தினால் ஜூன் மாதத்தில்12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகின்றது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

மேஷம்

செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே, வரும் 2ஆம் தேதி ராசிநாதன் செவ்வாய் கடக ராசியில் நீச்சம் அடைகிறார். இந்த நீச்சம் பெற்ற செவ்வாயை வக்ரம் பெற்ற சனி பகவான் மகர ராசியில் இருந்து பார்க்கிறார்.

இதன் மூலம் செவ்வாயின் நீச்சத் தன்மை நீங்கி விடும். பத்தாம் வீட்டில் உள்ள சனியின் பார்வை செவ்வாயின் மீது விழுவதால் வேலையில் திடீர் மாற்றம் ஏற்படும்.

புதிய வேலை கிடைக்கும். புரமோசன் கிடைக்கும் லாபம் ஆதாயம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பலம் தைரியம் அதிகரிக்கும். இரண்டாம் வீட்டில் புதன் ராகு உடன் இணைவதால் பேச்சில் கவனம் தேவை. பொருளாதார நிலையில் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

பணம் விசயமாக யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். சொல்லை விட செயலில் அதிக கவனம் செலுத்துங்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். ஜூன் 15ஆம் தேதி சூரியன் மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி சுக்கிரன் உடன் இணைகிறார். மூன்றாம் வீட்டில் சூரியன் சுக்கிரன் இணைவதால் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பூர்வ ஜென்ம பலன் கிடைக்கும். 22ஆம் தேதி சுக்கிரன் செவ்வாய் உடன் இணைவதால் சுப செலவுகள் அதிகரிக்கும்.

வண்டி வாகனம் வாங்கலாம். திருமணம் சுபகாரியம் தொடர்பாக பேசலாம். காதலிப்பவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். மொத்தத்தில் ஜூன் மாதம் மேஷ ராசிக்காரர்களு ஆதாயங்கள் அதிகம் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.

ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, ஜூன் மாதம் சூரியன் உங்கள் ராசியிலும் இரண்டாம் வீட்டிலும் பயணிக்கிறார். சுக்கிரன் இரண்டாம் வீட்டிலும் 3ஆம் வீட்டிலும் பயணம் செய்கிறார். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.

வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். எதிர்பார்க்காத திடீர் வாய்ப்பு கிடைக்கும். புதன் சுக்கிரன் பரிவர்த்தனை யோகம் கிடைக்கிறது. சுக்கிரன் வீட்டில் புதன், புதன் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் பலன்கள் யோகமாக மாறும். குடும்ப தேவைகள் நிறைவேறும்.

வக்கிரம் பெற்ற சனியால் தடைபட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். சுக்கிரன் மீது குருவின் பார்வை விழுகிறது. சுகங்கள் அதிகம் உண்டாகும். பயணங்களைத் தவிர்த்து விடவும். செவ்வாய் இரண்டாம் வீட்டில் இருந்து மூன்றாம் வீட்டிற்கு சென்று நீசமடைகிறார். சனிபகவான் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் ரிஷபத்தில் ராகு, புதன், சூரியன் பயணம் சஞ்சரிப்பதால் பொருள் சேர்க்கை ஏற்படும். இந்த மாதம் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

ராகுவின் பயணம் திடீர் யோகத்தைக் கொடுக்கும். மனதை சந்தோஷப்படுத்தும் வகையில் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்க நல்ல மாதம். உணவு விசயத்திலும் உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டவும்.

மிதுனம்

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே, இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் உங்கள் ராசியில் சுக்கிரன் பயணம் செய்கிறார். விரைய ஸ்தானத்தில் உள்ள சூரியன் உங்கள் ராசிக்கு வருகிறார். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். ராசியில் உள்ள செவ்வாய் 2ஆம் தேதி கடக ராசியில் நீசமடைகிறது.

குரு பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேலை தொழிலில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய நல்ல வாய்ப்புகள் தேடி வரும் இதுநாள் வரை இருந்த தடைகள் நீங்கும். பல நாட்கள் போராட்டம் முடிவுக்கு வரும். காதல் வாழ்க்கை கை கூடி வரும் காரணம் சுக்கிரன் செவ்வாயுடன் இணைந்து பயணம் செய்கிறார்.

திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அஷ்டமத்து ஸ்தானத்தில் உள்ள சனி வக்ரமடைந்திருப்பதால் பொறுமை நிதானம் தேவை. குடும்பத்தில் இதுநாள் வரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். வார்த்தைகளில் நிதானம் தேவை. வாகன பயணங்களில் கவனம் தேவை. பெற்றோர்களின் ஆரோக்கியத்திலும் உங்களின் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.

கடகம்

கடக ராசிக்கு ஜூன் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் உங்கள் ராசிக்கு செவ்வாய் வருகிறார். ராசிக்கு வரும் செவ்வாய்க்கு ஏழாம் வீட்டில் உள்ள சனியின் பார்வை கிடைக்கிறது. ஐந்தாம் வீட்டில் கேது,ஏழாம் வீட்டில் சனி, எட்டாம் வீட்டில் குரு, பத்தாம் வீட்டில் சூரியன், லாப ஸ்தானத்தில் ராகு, விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகங்கள் பயணம் செய்கின்றன.

சூரியன் ராகு உடனும் மாத பிற்பகுதியில் சுக்கிரன் உடனும் பயணம் செய்கிறார். சந்திர மங்கல யோகம் கிடைக்கும் போது நீங்கள் செய்யும் வேலையில் புரமோசன் கிடைக்கும். செவ்வாயின் பார்வை சந்திரன், குருவின் மீது விழும் போது நல்ல சம்பவங்கள் நடைபெறும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சுப காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். சொத்து சேர்க்கைகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் ஆதாயம் கிடைக்கும்.

உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுப விரைய செலவுகள் வரும். நீண்ட நாள் ஆசைகள், முயற்சிகள் நிறைவேறும். அஷ்டம ஸ்தானத்தில் குரு பயணம் செய்வதால் தொழில் ஸ்தானத்தில் பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்க்கவும்.

கண்டகச் சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் அக்கறை தேவை. இரவு நேர பயணங்களைத் தவிர்த்து விடவும். திருமணம் சுப காரியம் தொடர்பாக இந்த மாதம் பேச வேண்டாம் ஒத்திப்போடவும்.

சிம்மம்

சூரியன் ஆதிக்கம் நிறைந்த சிம்ம ராசிக்காரர்களுக்கு சிம்மம் பத்தாம் வீட்டில் இருக்கிறார். மாத பிற்பகுதியில் லாப ஸ்தானத்திற்கு வருகிறார். தனம், குடும்பம், வருமானம், வேலை அனைத்தும் சிறப்பானதாக இருக்கும். சுக்கிரனும் லாப ஸ்தானத்தில் இருப்பதால் செய்யும் தொழில் லாபம் இருக்கும். 15ஆம் தேரி சூரியன் லாப ஸ்தானத்தில் உள்ள சுக்கிரனுடன் இணைகிறார். உங்களின் சக்தி அதிகரிக்கும்.

உடல் பலம் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். வெளியூர் பயணங்களைத் தவிர்க்கவும். உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சனி பகவான் வக்ர நிலையில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தான அதிபதி சுக ஸ்தான அதிபதியுமான செவ்வாய் பகவான் விரைய ஸ்தானத்தில் நீச்சமடைந்து சனி பார்வை பெறுகிறார்.

இதனால் குடும்பத்தில் பெற்றோர்கள், சகோதரர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். சனி பகவான் ஆறாம் வீட்டில் இருந்து செவ்வாய் பகவானை பார்வையிடுவதால் கவனம் தேவை. குரு பகவான் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் பொருளாதார ரீதியான ஆதரவு கிடைக்கும்.

உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். ஜூன் மாதத்தில் உங்களுக்கு நோய்கள் நீங்கும், திருமண சுப காரியங்கள் கை கூடி வரும். புத்திர பாக்கியம் கைகூடி வரும். நல்ல பலன்கள் அதிகம் நடைபெறும் மாதமாக அமைந்துள்ளது. தினசரி சூரிய நமஸ்காரம் செய்யவும் நோய் பாதிப்புகள் நீங்கும். ஆரோக்கியம் அதிகரிக்கும்.

கன்னி

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, புத்திசாலித்தனமும் அறிவாளிகளாகவும் உள்ளவர்கள் நீங்கள்தான். உங்களுக்கு வரும் கஷ்டங்கள், சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள்.

காலச்சக்கரத்திற்கு 6வது ராசி கன்னி ராசி என்பதால் அதிக எதிர்ப்புகளை சாதாரணமாகவே சந்திக்க வேண்டியிருக்கும். சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. பாதகம் ஏற்படுத்தும் கிரகங்கள் எல்லாமே சாதகமாக உள்ளது. இந்த மாதம் புதன் சுக்கிரன் வீடுகள் மாறி பரிவர்த்தனை பெற்றிருப்பதால் யோகம் அதிர்ஷ்டம் தேடி வரும். பண வரவு தேடி வரும். தொழில் விசயமாக நண்பர்களின் ஆலோசனை கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 8ஆம் அதிபதி, மூன்றாம் வீட்டு அதிபதியும் ஆவார்.

இந்த மாதம் லாப ஸ்தானத்தில் செவ்வாய் நீச்சம் பெற்று மறைவதால் உங்களுக்கு லாபம் கிடைக்கும். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பது போல இந்த மாதம் உங்களுக்கு தொழில் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கை கூடி வரும். 5ஆம் வீட்டில் சனி பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வக்ரமடைந்துள்ளார்.

பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் தேடி வரும். குரு பகவான் ஆறாம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உங்களுக்கு வரப்போகும் தடைகளை உடைத்து முன்னேறுவீர்கள். விநாயகப் பெருமானை செவ்வாய்கிழமை வணங்கி வர நன்மைகள் நடைபெறும்.

துலாம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, உங்கள் ராசிநாதன் சுக்கிரன் இந்த மாத ஆரம்பத்தில் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்வது சிறப்பு. சூரியன், புதன் மாத முற்பகுதியில் எட்டாம் வீட்டில் பயணம் செய்வதால் கவனம் தேவை.

வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை, இந்த மாதத்தின் பிற்பகுதியில் உங்களுக்கு நோய் பாதிப்புகள், பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நன்மைகள் அதிகம் நடைபெறும். குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம்.

சந்திரன் சஞ்சாரமும் சாதகமாக உள்ளதால் திடீர் அதிர்ஷ்டம் வரும். சனிபகவான் நான்காம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாத பிற்பகுதியில் சூரியன் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். தடைகளை தாண்டி சாதிப்பீர்கள்.

பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். கடன் பிரச்சினை தீரும். பொறுமையாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டிய மாதம். வேலை தொடர்பாக உங்களின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இந்த மாதம் சொத்து வண்டி வாகனம் எதுவும் வாங்க முயற்சி செய்ய வேண்டாம் ஒத்திப்போடவும். திருமணம் சுப காரியம் தொடர்பாக மாத பிற்பகுதியில் பேச நன்மைகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடவும்.

விருச்சிகம்

செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, இதுநாள் வரை எட்டாம் வீட்டில் சஞ்சரித்து வந்த ராசி நாதன் செவ்வாய் இந்த மாதம் ஆரம்பத்திலேயே 9ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகி நீச்சமடைந்து பயணம் செய்கிறார்.

மூன்றாம் வீட்டில் சனி வக்ரகதியில் பயணம் செய்கிறார், நான்காம் வீட்டில் குரு மாத பிற்பகுதியில் வக்ரமடைந்து சஞ்சரிப்பார். முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பாக பெற்றோர்களின் ஆலோசனை பெறுவது அவசியம். திடீர் சுப செலவுகள் வரலாம். சூரியன் மாத முற்பகுதியில் ஏழாம் வீட்டில் ராகு உடன் சூரியன் பயணம் செய்கிறார்.

குடும்பத்தில் உள்ளவர்களுடன் பேசும் போது நிதானம் தேவை விட்டுக்கொடுத்து செல்லவும். தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம்.குரு உங்க குடும்ப ஸ்தான அதிபதி வக்ரமடைவது சிறப்பானதாக இல்லை. கூடுதல் விழிப்புணர்வு தேவை. உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டவேண்டும்.

பயணங்களில் அதிக கவனம் தேவையிருக்கும். கூடுமானவரை பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. காதல் விவகாரங்களில் சில பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் பேசும் போது கோபமான பேச்சுக்களைத் தவிர்க்கவும். விட்டுக்கொடுத்து செல்லவும்.

இந்த மாதத்தில் அதிக எதிர்பார்ப்பு எதுவும் வைத்துக்கொள்ள வேண்டாம். அமைதியும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் தேவைப்படும் மாதமாக அமைந்துள்ளது. திருமண சுப காரியங்கள் தொடர்பாக இந்த மாதம் எதுவும் பேச வேண்டாம் தள்ளிப்போடலாம்.

தனுசு

தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். உங்கள் ராசிநாதன் மூன்றாம் வீட்டில் அதிசாரமாக பயணம் செய்கிறார். மாத பிற்பகுதியில் 20ஆம் தேதிக்கு மேல் வக்ரமடைகிறார்.

சூரியன் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். மிதுன ராசியில் உள்ள சுக்கிரனின் நேர் பார்வை உங்கள் ராசி மீது விழுகிறது. செவ்வாய் நீச்சம் பெற்று எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்களுடைய புதிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்க பொறுமையும் நிதானமும் தேவை.

நவகிரகங்களின் சஞ்சாரம் சற்றே சாதகமற்ற நிலையில் இருப்பதால் பொறுமை நிதானம் தேவை. வண்டி வாகனங்களில் செல்லும் போதும் நிதானம் அவசியம். சூரியன் 15ஆம் தேதி ஏழாம் வீட்டிற்கு சென்று சுக்கிரன் உடன் இணைகிறார். பண பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

புதிய வேலைக்காக முயற்சி செய்யலாம். நம்பிக்கையுடன் முயற்சி செய்பவர்களுக்கு வெற்றிகள் தேடி வரும். ஏழாரை சனியின் முடிவு காலமாக இந்த காலத்தில் நினைத்த காரியங்கள் இழுபறியாகவே நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனமும் அக்கறையும் தேவைப்படும். பெரிய திட்டங்கள் எதுவும் வேண்டாம்.

திருமணம் சுப காரியம் தொடர்பாக இந்த மாதம் முயற்சி செய்ய வேண்டாம். இருக்கிற வேலையை தக்க வைத்துக்கொள்ளுங்கள், வேலையை விட்டு விட்டு புதிய வேலைக்கு எதுவும் முயற்சி செய்ய வேண்டாம். இந்த மாதத்தில் பொறுமையும் நிதானமும் தேவைப்படும் மாதமாகும்.

மகரம்

சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே, ராசியில் சனி ஆட்சி பெற்று வக்ர நிலையில் பயணம் செய்கிறார். இரண்டாம் வீட்டில் குரு பகவான், 5ஆம் வீட்டில் புதன், ராகு, சூரியன் பயணம் செய்கின்றனர்.

ஆறாம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். ஏழாம் வீட்டில் செவ்வாய் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். 15ஆம் தேதி சூரியன் 6ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கிறார். இரண்டாம் வீட்டில் குரு மாத இறுதியில் வக்ரமடைவது உங்களுக்கு ஆதாயமான கால கட்டமாகும். மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் வீடு வாங்க வேண்டும் என்ற எண்ண நிறைவேறும். கட்டிய வீட்டினை வாங்கலாம்.

பாதக ஸ்தானாதிபதியாக செவ்வாய் நீச்சம் பெற்றிருப்பதோடு சனியில் பார்வை கிடைப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நோய் தொற்றுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் கவனம் தேவை. அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம்.

ஆறாம் வீட்டில் சுக்கிரன் மாத பிற்பகுதியில் ஏழாம் வீட்டிற்கு செல்கிறார். குடும்பத்தில் வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இந்த மாதம் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். புதிய தொழில் முயற்சி செய்யலாம். வேலையில் இருந்த பிரச்சினைகளும், வாழ்க்கைத்துணையால் ஏற்பட்ட பிரச்சினைகளும் நீங்கும்.

செவ்வாய் சனி பார்வையால் சில பாதிப்புகள், தாமதங்கள் ஏற்படும். சமூக வலைத்தளங்களில் அரசை விமர்சித்து எழுதுவதைத் தவிர்க்கவும். திருமணம் தொடர்பாக இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். ஏழரை சனியில் ஜென்ம சனி நடைபெறுவதால் தடை தாமதங்கள் ஏற்படும். புதிய முடிவுகளை எடுக்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எடுப்பதால் நன்மைகள் நடைபெறும்.

கும்பம்

சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே, ராசியில் குரு, நான்காம் வீட்டில் சூரியன் ராகு, புதன், ஐந்தாம் வீட்டில் சுக்கிரன், ஆறாம் வீட்டில் செவ்வாய், பத்தாம் வீட்டில் கேது, விரைய ஸ்தானத்தில் சனி வேலை செய்யும் இடத்தில் பிரமோசன் கிடைக்கும்.

நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். விரைய சனி காலமாகும். தொழில் வியாபாரத்தில் ஏற்படும் நிதி நெருக்கடிகளை நண்பர்கள் உதவியோடு சமாளிப்பீர்கள். ஏழரைசனியின் தாக்கத்தால் பொருளாதார நெருக்கடிகள் வந்து போகும். அதிகாலையில் எழுந்து சுறுசுறுப்பாக தியானம் செய்வது நல்லது.

மனரீதியாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தாலே தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். மாணவர்களுக்கு சில குழப்பங்கள் வரலாம் புதிய கல்வியை தேர்வு செய்யும் முன்பாக பெற்றோர், ஆசிரியர்களை ஒருமுறைக்கு இருமுறை ஆலோசித்து முடிவு செய்யவும். செவ்வாய் உங்கள் தொழில் கிரகம் வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

புதிய வேலை விசயமாக முயற்சி செய்யலாம். திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசும் போது கவனம் தேவை. காதலிப்பவர்கள் இந்த மாதம் செய்பவர்கள் பாதுகாப்பாக விழிப்புணர்வோடு இருக்க வேண்டியிருக்கும் காரணம் ஆறாம் வீட்டில் இந்த மாதம் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை நிகழ்வதால் எதிர்பாலினத்தவர்களுடன் பழகும் போது எச்சரிக்கை தேவை.

கணவன் மனைவிக்கிடையே சின்னச் சின்ன மன சங்கடங்கள் வரலாம் வெளிப்படையாக பேசி பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்யுங்கள். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமும் நிதானமும் தேவை.

மீனம்

குரு பகவானை ராசி நாதனக் கொண்ட மீன ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்கள் ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மூன்றாம் வீட்டில் சூரியன், ராகு, புதன், நான்கில் சுக்கிரன், ஐந்தாம் வீட்டில் செவ்வாய், ஒன்பதாம் வீட்டில் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன.

இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்களுடைய பொறுப்பை தட்டிக்கழிக்க வேண்டாம் கவனத்தோடும் விழிப்புணர்வோடும் இருப்பதும் அவசியம். நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். கணவன் மனைவிக்கிடையே அன்பும் நெருக்கவும் கூடும்.

உறவினர்களிடத்தில் சின்னச் சின்ன சலசலப்புகள் வரலாம் கோபத்தை குறைத்து நிதானமாக பேசவும். சில நேரங்களில் வீண் விரைய செலவுகள் வரலாம் சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும்.

திடீர் திருப்பங்களும் எதிர்பாராத பண வரவும் வரும். புதிய வாய்ப்புகள் அதிகம் வரும் அதனை பயன்படுத்தி முன்னேறப் பாருங்கள். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பும் பரிவும் காட்டுவது அவசியம். வாகன பயணங்களில் நிதானம் தேவை.

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US