2022 ஜூன் மாத ராசிப்பலன் : கோடீஸ்வர யோகம் பெறும் அதிர்ஷ்டகார ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

Horoscope
By Kishanthini May 28, 2022 12:50 PM GMT
Report

ஜூன் மாதத்தில் சூரியன் ரிஷபம் மற்றும் மிதுன ராசிகளில் பயணம் செய்கிறார். 

ஜூன் மாதம் தென்மேற்குப் பருவமழை மாதம் இந்த மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் அதிர்ஷ்டம் வரும், சிலருக்கு யோகம் ஏற்படும்.

அந்தவகையில் ஜூன் மாதம் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் யார் என பார்ப்போம். 

மேஷம்

மேஷ ராசி அதிபதியான செவ்வாய் பகவான், இந்த மாத தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 12ம் வீடான விரய, மோட்ச ஸ்தானத்தில் குரு பகவானுடன் சஞ்சரிக்கிறார். இந்த மாதத்தில் வெளியூர் தொடர்பான வேலை, வியாபாரத்திற்கு முயல்பவர்களுக்குச் சாதகமான மாதமாக அமையும்.

வேலை, கல்வி தொடர்பாக வெளியூர், வெளிநாட்டில் தங்கி இருப்பவர்களுக்கு சிறப்பான மாதமாக இருக்கும். ஏனெனில் ராசிக்கு 12ம் அதிபதி, 12ம் வீட்டிலேயே ஆட்சி அதிகாரத்தோடு இருப்பது உங்களுக்கு சாதகமானதாக அமையும்.

ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான வேலைகள், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் பெறக்கூடிய மாதமாக அமையும். தந்தை வழியில் உங்களுக்கு அனுகூலம் ஏற்படும். கோயில், தொண்டு போன்ற விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆன்மிக சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது.

சுக்கிரன் உங்கள் ராசியில் இருப்பது மேலும் விசேஷமானது. குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். ராகுவுடன் சுக்கிரன் இருப்பதால் துணையுடன் அனுசரித்துச் செல்லவும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். அலைச்சல், பொருள் விரயம், செலவு இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசி அதிபதி, ராசிக்கு 12ம் இடத்தில் சஞ்சரிக்கக்கூடிய காலம். அதனால் உங்களுக்கு விரய செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நிதி நிலை சிறப்பாக இருந்தாலும், பணம் கொடுக்கல் வாங்கலில் சில பிரச்னைகளை சந்திக்க வேண்டியது இருக்கும்.

பணம் கொடுத்தல் வாங்குதலை தவிர்க்கவும். அதனால் கஷ்டம் அதிகரிக்கும். ராசியிலேயே 5ம் வீட்டு அதிபதி புதன் சஞ்சரிப்பது சாதக பலனைத் தரும். சொத்து, குழந்தைகள் என பூர்விகம் சார்ந்த நல்ல பலன்கள் கிடைக்கும். குல தெய்வ வழிபாடு செய்வது நல்லது.

குடும்ப தேவைகள் அதிகரிக்கும். குடும்ப செலவுகள் செய்ய வேண்டியது இருக்கும். இருப்பினும் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் என்பதால் நிதி பிரச்னை ஏற்படாது. மனைவி, நண்பர்கள், உறவினர்கள் மூலம் நல்ல அனுகூலமான, ஆதரவாக நடந்து கொள்வார்கள்.

சகோதரர் வகையில் நன்மை உண்டாகும். வீடு, மனை சார்ந்த விஷயங்களில் உகந்த மாதமாக இருக்கும். சூரியன் கேந்திரதிபதி ராசிக்கு திரிகோணத்தில் இருப்பதால் தாய் வழி நன்மை உண்டாகும்.

கடகம்

கடக ராசிக்கு இந்த மாதம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். ராசி யோகாதிபதியான செவ்வாய், பாக்கிய ஸ்தானத்தில் குருவுடன் சேர்ந்திருப்பது மிகவும் சிறப்பான நற்பலனைத் தரும். பூர்விக பலன்கள், சொத்துக்கள் வாங்க, விற்க, குழந்தை பாக்கியம் உள்ளிட்டவை ஏற்படும்.

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். குல தெய்வ வழிபாடு செய்ய வாய்ப்புள்ளது. தொழில் ஸ்தான அதிபதியான செவ்வாய், ராசிக்கு 10ம் இடத்திற்கு 12ம் வீட்டில் இருப்பதால் உங்களுக்கு அலைச்சல், பணிச்சுமை அதிகரிக்கும்.

இருந்தாலும் நற்பலன்கள் ஏற்படக்கூடியதாக இருக்கும். ராசிக்கு 2ம் வீட்டு அதிபதி சூரியன், ராசிக்கு லாப ஸ்தானத்தில் இருப்பதால் உங்கள் முயற்சிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

வருமானம் அதிகரிக்கும். உங்கள் பேச்சில் இனிமை இருக்கும். பயணங்கள் மூலமாக உங்களுக்கு லாபம் உண்டாகும். சனியின் அமைப்பு சாதகமற்று இருப்பதால், மனைவி வழியில் சில பிரச்னைகள் உண்டாகும். மாத தொடக்கத்தில் சில சங்கடங்கள் உண்டானாலும், பிற்பகுதியில் மிக சாதகமான பலன்கள் கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசியைப் பொறுத்த வரையில், மாத தொடக்கத்தில் ராசி அதிபதி 12ம் வீட்டில் சஞ்சரிப்பதால் சில அலைச்சல்கள், தொந்தரவுகள் இருந்தாலும், ஜூன் 3ல் உங்கள் ராசியிலேயே வருவதால் உங்களுக்கு சாதகமான பலன்கள் அதிகரிக்கும். வண்டி, வாகன செலவுகள் ஏற்படக்கூடும்.

சுக்கிரன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் பூர்விக சொத்து கிடைக்கும். குலதெய்வ வழிபாடு செய்வது நற்பலனை அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 10ம் இருப்பதால் உங்களின் பலம் அதிகரிக்கும், சொந்த தொழில் செய்பவர்களுக்கு காலம் சாதகமாக அமையும்.

நிலம் சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு லாபகரமானதாக இருக்கும். இளைய சகோதரர் வகையில் நன்மையும், லாபமும் உண்டாகும். சனி சாத நிலையில் இருப்பதும் சாதக பலன் கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசி அதிபதி சூரியன் கடந்த மாதம் ராகுவுடன் சேர்ந்து சஞ்சரித்து வந்தார். இதனால் குடும்பம், வேலை தொடர்பான சில மன வருத்தம் தரக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கும். இந்த மாதம் அது போன்ற பிரச்னைகள் நீங்கி உங்களுக்கு சாதகமானதாக இருக்கும்.

3ம் இட அதிபதி சுக்கிரன் ராகுவுடன் சேர்ந்திருப்பதால், உறவினர்கள், பெண்களிடம் கவனம் தேவை. வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். இல்லற சுகம் சிறப்பாக இருக்கும். சில விரயம் ஏற்பட்டாலும் அது, உபயோகமானதாக இருக்கும்.

குரு 8ல் இருந்தாலும் அவரின் பார்வை பலன் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். அதிக தூக்கத்தையும், சோம்பேறித்தனத்தை ஒதுக்கிவிட்டு, சுறுசுறுப்புடன் செயல்பட உங்களுக்கு பல வழிகளில் அற்புத பலன் தரக்கூடிய மாதமாக அமையும். வேலையை தள்ளிப்போட வேண்டாம்.

சூரியன் 10ம் இடத்திலிருந்து 11ம் இடத்திற்கு இந்த மாதம் வருவார்.அதன் மூலம் உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். சூரிய வழிபாடு உங்களுக்கு சாதகமான பலனைத் தருவார்.

கன்னி

கன்னி ராசிக்கு வியாபாரம், தொழில் ரீதியான சாதக பலன்கள் கிடைக்கும் என்றாலும், அதற்காக சில சவால்களைச் சந்திக்க வேண்டியது இருக்கும். ராசி அதிபதி புதன் 9ம் வீட்டில் சூரியனுடன் அமர்ந்திருப்பதால் சில பிரச்னைகள் ஏற்படும்.

வேலைத் தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். சூரியன் 9ல் இருக்கக்கூடிய மாதத்தின் முதல் பாதியில் நற்பலன்கள் கிடைக்கும் என்றாலும், பிற்பாதியில் உங்களுக்கு சாதகமற்ற சூழல் உண்டாக வாய்ப்புள்ளது.

6ல் சனி இருப்பதால் மாணவர்கள் கல்வியில் முழு கவனம் செலுத்தி படிப்பது அவசியம். கல்வியில் தடை உண்டாகலாம். அஷ்டமாதிபதி செவ்வாய், குருவுடன் சேர்ந்திருப்பதால், குடும்பஸ்தர்கள் யோசித்து, நிதானமாக பேசுவது அவசியம். சில மனக்கசப்பு உண்டாகும்.

துலாம்

துலாம் ராசியில் கேது பகவானும், துலாம் ராசி அதிபதி சுக்கிரன் ராகு உடனும் சேர்ந்திருக்கின்றனர். மற்றவர்கள் உங்களை கட்டுப்படுத்த நினைப்பார்கள். அவர்களிடம் சுமூகமாக நடந்து கொள்ளவும், தப்பிக்கவும் முயலவும்.

நேர்மறை சிந்தனையுடன் எதையும் அணுகுவது அவசியம். எதிர் பாலினத்தவர், எதிரிகள் மூலமாக உங்களுக்கு சில விரயங்கள் உண்டாக வாய்ப்புள்ளது. இருப்பினும் செல்வம் சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

நீங்கள் செய்யக்கூடிய வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். என்ன தான் சாதகமான பலன்கள் கிடைத்தாலும், எதிரிகளுடன், வேறு இனம், மொழியினரிடம் பழகும் போது எச்சரிக்கையாகவும், கவனமாக செயல்பட வேண்டியது அவசியம்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அதிபதியான செவ்வாய், 5ம் இடத்தில் குரு உடன் சேர்ந்துள்ளார். இதனால் உங்களின் எந்த ஒரு விருப்பம், இலக்கை அடைதல் போன்ற விஷயங்கள் சாதகமாக அமையும். 7ம் வீட்டு அதிபதியான சுக்கிரன், எதிரி ஸ்தானமான 6ல் இருக்கிறார்.

இதனால் குடும்பஸ்தர்கள் கண்டிப்பாக பேச்சில் கவனமுடன் இருப்பது அவசியம். கணவனோ, மனைவியோ, எதிரியோ என யாராக இருந்தாலும் வாயைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருப்பது அவசியம்.

8ல் ஆளுமைத் தரும் சூரியனுடன், புதன் பகவான் சேர்ந்திருப்பதால் சிறிய விஷயத்திற்கெல்லாம் மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

வேலை, வியாபாரம், தொழில் என எது செய்தாலும் அதில் கவனமும், அங்குள்ளவர்களுடன் ஜாக்கிரதையாகவும் அணுகுவது அவசியம். உங்களின் ஆசைகள் நிறைவேறும். பெற்றோர் மூலம் நல்ல அறிவுரை கிடைக்கும். உங்களின் முன் கணிப்பு உங்களுக்கு பெரியளவில் சரியாகவும், சாதகமாகவும் அமையும்.

தனுசு

தனுசு ராசி, லக்கின காரர்களின் அதிபதியான குரு பகவான் இந்த மாதம் முன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதும், அதிக தூக்கம், சோம்பேறித்தனத்தை மாற்றிக் கொள்வது அவசியம். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ஆனி மாதம் தொடங்கும் போது சூரிய பகவான் 6ம் வீட்டிற்கு வருவார். அப்போது உங்கள் எதிரிகாளிகள் குறித்து கவனமுடன் நடந்து கொள்ளவும். ஆரோக்கியம் சிக்கலைத் தருவதாக இருக்கும். சுக்கிரன் 5ல் ராகுவுடன் இருப்பதால் உங்களின் ஆசை, விருப்பங்களை அடுத்தவர்கள் மீது திணிக்க வேண்டாம்.

நீங்கள் முடிவெடுப்பது தவறாக போக வாய்ப்புள்ளது. ஆனி மாதத்தில் எந்த ஒரு விஷயத்திலும் அதிகம் குழப்பிக் கொள்ளாமல் அமைதியாகவும், நிதானமாகவும் இருப்பது நல்லது. உங்களின் எண்ணங்கள் நிறைவேறும். இல்லற இன்பம் கிடைக்கும். குறிப்பாக நல்ல தூக்கம் கிடைக்கக்கூடிய மாதமாக இருக்கும்.

மகரம்

மகர ராசி அதிபதி சனி பகவான், மூல திரிகோண வீட்டில் சிறப்பாக உள்ளார். அதனால் உங்களின் எந்த ஒரு வேலையும் சிறப்பாக முடிப்பீர்கள். உங்களின் கவலை தீரும்.

அதே சமயம் 4ல் ராகுவுடன், சுக்கிரன் இணைந்திருப்பதால், உங்களின் வியாபாரம், தொழில் தொடர்பான முடிவுகள் எடுக்கும் போது கூடுதல் கவனமுடன் செயல்படுங்கள். நன்றாக ஆலோசனை செய்து கொள்வது தவறில்லை.

சிலர் காதலில் விழ வாய்ப்புள்ளது. இருப்பினும் சுய ஜாதகத்தில் சாதகமாக இருந்தால் அது இனிமையானதாக இருக்கும். இந்த மாதம் குல தெய்வ வழிபாடு, சுக்கிரனுக்கு உகந்த ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்துவிட்டு வருவது நல்லது.

கும்பம்

கும்ப ராசி அதிபதி சனி பகவான், ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரின் 7ம் பார்வையால் உங்களின் குடும்பத்தில் சில சஞ்சலங்களை சந்திக்க வேண்டியது இருக்கும். கணவனோ, மனைவியோ நீங்கள் செய்ய வேண்டிய வேலையை செய்வதில் சுறுசுறுப்பின்மையாக இருப்பீர்கள். அதே சமயம் ஆளுமை நிறைந்த உங்கள் துணை ஸ்தானமான சிம்மத்தைப் பார்ப்பதால், சில மனகஷ்டம் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.

உங்களின் குறிக்கோளை விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டியது இருக்கும். ராகுவுடன் சுக்கிரன் இருப்பதால் தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

2ல் குரு இருப்பதால் தன வரவு குறைய வாய்ப்புள்ளது. அதே சமயம் உங்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும். பணியிடத்தில் நன்மதிப்பும், பதவி உயர்வு போன்ற விஷயங்கள் நடக்க வாய்ப்புள்ளது.

மீனம்

மீன ராசி அதிபதி குரு பகவான், ராசியிலேயே இருப்பதும், அவருடன் 2ம் வீட்டு அதிபதி செவ்வாயும் சேர்ந்திருப்பது விசேஷமானது. குடும்பத்தைப் பொறுத்த வரையில் 2ம் விட்டில் ராகுவும், அவருடன் களத்திர ஸ்தானாதிபதி சுக்கிரன் சேர்ந்திருக்கிறார்.

இதனால் உங்கள் குடும்பத்தில் சில மன வருத்தம், சலசலப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பேச்சைக் கட்டுப்படுத்தி இருக்கவும். பேச்சில் கண்டிப்பாக நிதானம் தேவை. நான் பேசுவது தான் சரி என பேசுவது பிரச்னையை அதிகரிக்கும். வீண் பேச்சால் குடும்பம், பணியிடத்தில் தேவையற்ற பிரச்னைகளைக் கொண்டு வரும்.

சனி பகவான் 12ம் இடத்தில் இருந்து ராசிக்கு 6ம் இடத்தை பார்வையிடுகிறார். இதனால் எலும்பு சார்ந்த ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தை வழியில் மகிழ்ச்சி ஏற்படும். பணியிடத்தில் மேன்மை அடைய சூரிய பகவான் சாதகமாக இருப்பார். 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US