”ஏ சாமி” பாடலுக்கு நடனமாடிய நடிகை விபத்தில் பரிதாப மரணம்
சமீபத்தில் வைரலான பிரபல பாடல் ”ஏ சாமி” பாடலுக்கு நடனமாடிய துணை நடிகை ஜோதி ரெட்டி விபத்தில் பலியான அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'புஷ்பா'.
இந்த படத்தில் இடம்பெற்ற “ஏ சாமி” பாடல் டிரெண்டானது, இந்த பாடலுக்கு ஜோதி ரெட்டி என்ற துணை நடிகையும் நடனம் ஆடியிருந்தார்.
இந்நிலையில் ஜோதி நேற்றைய தினம் 5.30 மணியளவில் ரயில் பயணிக்கும் போது ஷாத்நகரில் ரயில் நின்றுள்ளது.
ஆனால் தூக்கத்தில் இருந்த ஜோதி காச்சிகுடா ஸ்டேஷ்ன் வந்துவிட்டதாக நினைத்து ஓடும் ரயிலில் இருந்து இறங்கியுள்ளார்.
இறங்கிய பின்னர், வேறொரு ஸ்டேஷன் என்பதை உணர்ந்து மீண்டும் ரயிலில் ஏற முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக தவறி விழ, பலத்த காயம் ஏற்பட்டது, உடனடியாக ஜோதியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆனால் அவரை பரிசோதித்த போது, ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.
இதனிடையே அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.