கும்கிப்பட நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்!
கும்கி படத்தில் நடித்த நடிகர் ஜூனியர் பாலையா தனது 70வது வயதில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் ஜூனியர் பாலையா
நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகன் தான் நடிகர் ஜூனியர் பாலையா. இவர் சினிமாவிற்காக தனது பெயரை ரகு என்று மாற்றிக்கொண்டார்.
1975ஆம் ஆண்டு வெளியான ‘மேல்நாட்டு மருமகள்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, பல படங்களிலும் நடித்துக்கொண்டே இருந்தார்.
இவர் ’கோபுர வாசலிலே’, ‘கரகாட்டக்காரன்’, ‘சின்னத்தாயி’, ‘சங்கமம்’, ‘வின்னர்’ உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதையடுத்து தல அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருந்தார்.
இறுதியாக 2021ல் வெளியான ’என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை அவரது சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு காலமானார். இவரது உடலுக்கு இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என குடும்பத்தார்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஜூனியர் பாலையாவின் மறைவிற்கு திரையுலகமே இரங்கல் தெரிவித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |