நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் அணிந்திருந்த சட்டையின் விலை.., எவ்வளவு தெரியுமா?
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் அணிந்துள்ள சட்டை ஒன்றின் விலை இணையத்தில் வைரலாகி வருகிறது.
எவ்வளவு தெரியுமா?
தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜூனியர் என்.டி.ஆர். இருந்து வருகிறார்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த தேவரா திரைப்படம் தியேட்டர் ரிலீஸில் மட்டும் சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.
அடுத்ததாக இவர் இந்தியில் வார் படத்தின் 2ஆம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் இவர் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஜூனியர் என்டிஆர் பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் இணையவுள்ளார்.
இந்நிலையில் அவர் அணிந்துள்ள சட்டை ஒன்று இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ETRO என்ற பிராண்டை சேர்ந்த அந்த சட்டையின் விலை ரூ. 85 ஆயிரத்திற்கு ஆன்லைனில் விற்பனையாகிறது.
ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள் அவரின் சட்டையின் விலை அதிர்ச்சியை அளிக்கிறது என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |