சிம்ம ராசியில் குரு, செவ்வாய் சேர்க்கை... இன்று அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்
Jupiter Mars Conjunction: குரு மற்றும் செவ்வாய் சேர்க்கையால் அதிர்ஷ்டத்தினை பெறும் மூன்று ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
குரு, செவ்வாய் சேர்க்கை
பொதுவாக ஜோதிடத்தில் கிரகங்களின் இடமாற்றம், சேர்க்கை இவை முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. தேவர்களின் குருவாக இருக்கும் குரு பகவான் சிம்ம ராசியில் பயணித்து வருகின்றார்.
கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் இன்று சிம்ம ராசிக்குள் நுழைய உள்ளார். இதனால் குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கை நிகழ்கின்றது.

ஜோதிடத்தில் குரு பகவான் அறிவு, அதிர்ஷ்டம், கல்வி, செல்வம் இவற்றிற்கு காரணராகவும், செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல், தன்னம்பிக்கை இவற்றிற்கு காரணராகவும் இருக்கின்றார்.
இந்த கிரகங்களின் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மேஷ ராசியில் 5வது வீட்டில் இந்த சேர்க்கை நிகழஉள்ளதால், வாழ்வில் நேர்மறையான மாற்றங்கள் கிடைக்குமாம்.
தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்குமாம்.
பணி செய்பவர்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது. பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைக்குமாம்.
புதிய வருமான ஆதாரங்கள் உருவாவதுடன், நிதி நிலையிலும் நல்லதொரு முன்னேற்றம் கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் இந்த சேர்க்கை நடைபெறுவதால், இன்று முதல் முக்கியமான காலகட்டமாக இருக்குமாம்.
வேலை தேடுபவர்களுக்கு நல்ல வெலை கிடைக்கும்.
பணியிடத்தில் தங்களது திறமையை வலுப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு பதவி மற்றும் புதிய பொறுப்பு கிடைக்கும்.
புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால் இந்த காலம் உகந்ததாக இருப்பதுடன், பல வழிகளில் பணம் தேடி வருமாம்.

கும்பம்
கும்ப ராசியில் 7வது வீட்டில் இந்த சேர்க்கை நிகழவுள்ள நிலையில், தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு கிடைக்கும்.
வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பு கிடைக்குமாம்.
நீண்ட கால கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளால் கவனிக்கப்பட்டு, நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.
நிதி நிலையில் முன்னேற்றம், வராமல் இருந்த பணம் தற்போது கைசேரும் வாய்ப்புள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |