மிதுனம் குரு பெயர்ச்சி பலன் 2021: அதிர்ஷ்ட பலன்கள் உங்களை தேடி வரப்போகுதாம்!

horoscope astrology
By Kishanthini Oct 25, 2021 04:41 AM GMT
Report
Courtesy: samayam

குரு பகவான் பெயர்ச்சி பிலவ வருடம் ஐப்பசி 27 (நவம்பர் 13) அன்று மாலை 6.22 மணிக்கு மகர ராசியில் இருக்கும் அவிட்டம் 2ம் பாதத்திலிருந்து கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு குரு பெயர்ச்சி ஆக உள்ளார்.

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி நவம்பர் 20ம் தேதி (கார்த்திகை 4) குரு பெயர்ச்சி நிகழ உள்ளது. 13/04/2022 வரை குரு நேர்கதியாக இருப்பார்.

இப்பெயர்ச்சியால் மிதுன ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகின்றது என்பதை பார்ப்போம். 

துன்பங்களை சந்திக்க நேரிடும்

மிதுன ராசிக்கு அஷ்டம சனியோடு, குருவும் நீச்சமாக இருந்ததால், இதுவரை சொல்லில் அடங்காத துன்பத்தை அனுபவித்து வந்தனர். உங்களின் நற்பெயர் கெடுதல், அவமானம், ஆன்மிகவாதிகளுக்குச் சோதனைகள், உடல் ஆரோக்கியம் பாதித்தல், பொருளாதார பாதிப்பு என பல பிரச்னைகளை சந்தித்திருப்பார்கள். 

  கால புருஷ தத்துவத்தின் படி குரு பகவான் 11ம் வீடான கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இதுவரை குரு சனி பகவானின் வீடான மகரத்தில் முழு நீச்சமாக இருந்தார். தற்போது சமம் என்ற இடத்திற்கு செல்ல உள்ளார்.

குரு 5ம் பார்வை 

குரு பெயர்ச்சியால் அற்புத பலன்களைப் பெறப்போகும் அடுத்த ராசி மிதுனம். ஏற்கனவே அஷ்டம சனியால் குடும்பத்தில் கஷ்டம், விபத்து, வேலையின்மை என மிக கடினமான பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் மிதுன ராசியினருக்கு, குருவின் 5ம் பார்வை உங்கள் மீது விழுவதால் மிக சிறப்பான பலனைப் பெற உள்ளீர்கள். இதனால் அஷ்டம சனி கஷ்டங்கள் பெருமளவு குறையப்போகிறது என்று சொன்னால் மிகையல்ல.

பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து, 10க்கு உடைய ராசி அதிபதி உங்கள் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் உங்களின் தேக்கங்கள் நீங்கும்.   

 அதிர்ஷ்ட பலன்கள்

குரு உங்கள் ராசிக்கு 9ம் இடத்தில் அமர்வதாலும், உங்கள் ராசியை குரு 5ம் பார்வையாக பார்ப்பதால் மிகப்பெரிய வலிமையும், அதிர்ஷ்ட பலன்களும் உங்களுக்கு ஏற்படும்.

கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்தல், ஆன்மிக நாட்டம் கொள்ளுதல், மகான்களின் ஆசி பெறுதல் என நன்மை உண்டாகும்.

மிதுன ராசியைச் சேர்ந்தவருக்கோ அல்லது மிதுன ராசி பெற்றோர் பிள்ளைகளுக்கு திருமணம் ஆகவில்லை என்ற மனக்கவலையில் இருந்தால், இந்த குரு பெயர்ச்சி காலத்தில் விரைவாக நல்ல வரன் அமைந்து திருமணம் நடக்கும்.

குடும்பம்  

குழந்தை வரத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்குக் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.  

உங்களின் மதிப்பு, மரியாதை சமூகத்தில் அதிகரிக்கும். பெரியவர்களின் அருள், ஆசி கிடைக்கும். முன்னோர்களின் சொத்துக்கள் உங்களுக்கு வந்து சேரும். சொத்து வாங்குதல், விற்றல் வகையில் உங்களுக்கு நல்ல லாபம் ஏற்படும்.

மாணவர்களுக்கு மேற்படிப்பு தொடர்பான முன்னேற்றங்களை அடைவீர்கள். ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளுக்கு வெற்றி கிடைக்கும்.

பாக்கிய ஸ்தானத்தில் குரு அமர்வதால் உங்களின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான அதிர்ஷ்டங்கள் ஏற்படும்.

வேலை

பதவி கிடைக்கும்:உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய கெளரவம் தேடிவரும். நீங்கள் செய்ய வேண்டியது கடின உழைப்பு மட்டும் தான்.

தொழில்

தொழில், வியாபாரத்தில் கவனமாக இருப்பது அவசியம். ஏனெனில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும், உங்களுடன் இருப்பவர்களால் உங்களின் பெயர் கெடக்கூடிய வாய்ப்பு உள்ளது. வேலை நிமித்தமாக சில அவமானங்கள் ஏற்படலாம்.

வெளிநாடு தொடர்பான தொழில், வியாபாரம், வேலைக்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, அவர்களின் முயற்சியும், கனவும் பலிக்கும்.

இந்த காலகட்டத்தில் பணத்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் உங்களின் மகிழ்ச்சி, குடும்ப நிம்மதியில் எந்த பிரச்சினையும் ஏற்படாது.

நட்சத்திரத்திற்கான பலன்

மிருகசீரிடம் 3, 4 பாதம்

பதவி, பாராட்டு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைவீர்கள். விரும்பிய மேற்படிப்பு படிக்க வாய்ப்பு உருவாகும்.

திடீர் வருமானம், சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. பரம்பரை தொழில் செய்ய வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு வெளிநாடு, வெளியூர் பயணங்கள் சென்று வர வாய்ப்புள்ளது.

சில கருத்துவேறுபாடுகளால் பிரிந்த, அல்லது பிரசனையில் இருக்கும் தம்பதியினர் ஒன்று சேரும் வாய்ப்புள்ளது.

திருவாதிரை

ராகு ஆளக்கூடிய திருவாதிரை நட்சத்திரத்திற்கு இந்த குரு பெயர்ச்சி யோகத்தை அள்ளி வழங்கக்கூடிய காலமாக இருக்கும். நீங்கள் சிறிய முயற்சி எடுத்தாலே, வேலை தானாக நடக்க வாய்ப்புள்ளது.

மூதாதையர்கள் செய்த புண்ணியங்கள் உங்களுக்கு நற்பலன்களாகக் கிடைக்கும். அவர்களின் சொத்துக்கள் உங்களுக்கு வந்து சேரும். வெளிநாட்டு படிப்பு, வேலை, வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வாய்ப்புகள் சிறப்பாக உண்டு.தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

புனர்பூசம்

உங்களின் தொழில், வியாபாரம் மூலம் இருந்த பிரச்னைகள் உங்களின் செல்வாக்கு மூலம் காணாமல் போகும். உங்களுக்கு தொல்லை கொடுத்த நபர்கள், மேலதிகாரிகள் மாறி உங்களுக்கு சாதகமான நபர்கள் வர வாய்ப்புள்ளது.

உடல் ஆரோக்கியம் சிறக்கும். வீண் செலவுகள் நீங்கும்.

வழிபாடு

குரு, புதன் வழிபாடு செய்வதும், இஷ்ட தெய்வங்களை தொடர்ந்து வழிபட்டு வருவதால், உங்கள் வெற்றிக்கு எந்த தடையும் ஏற்படாது.   

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US