நான் ஒருவேளை மரணிக்கலாம்! இரத்த புற்றுநோயை வெளிப்படுத்திய பிரித்தானிய நடிகர்
நான் வஞ்சகன் என்றும், நான் ஒருவேளை மரணிக்கலாம் என்று பிரபல நடிகர் சாம் நீல் தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.
சாம் நீல்
ஜுராசிக் பார்க் படத்தின் மூலம் உலகப் புகழ்பெற்ற நடிகராக மாறியவர் சாம் நீல் (75). வடக்கு அயர்லாந்தில் பிறந்த இவர் நியூசிலாந்தில் குடியேறினார்.
1975ஆம் ஆண்டு முதல் நடித்து வரும் நீல், 1993ஆம் ஆண்டு வெளியான ஜுராசிக் பார்க் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். அது அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
@Alamy Stock Photo
புற்றுநோய் சிகிச்சை
இந்த நிலையில் அவர் எழுதியுள்ள Did I Ever Tell You This? புத்தகத்தில், புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதை நீல் வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, இரத்த புற்றுநோயின் மூன்றாம் நிலையில் இருப்பதாக கூறியுள்ள நீல், 'நான் வஞ்சகன், நான் இறக்க வாய்ப்புள்ளது' என குறிப்பிட்டுள்ளார்.
@AFP
வாழ்வதற்கு காரணம்
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'உண்மையில் எனக்கு வாழ்வதற்கு ஒரு காரணம் என்பதை உணர்ந்தேன். அதைப் பற்றி நாளை எழுதுகிறேன்...அது என்னை மகிழ்விக்கும்.
நான் வேலை செய்யப் பழகிவிட்டேன். நான் வேலை செய்ய விரும்புகிறேன். வேலைக்கு செல்வது எனக்கு பிடிக்கும். நான் ஒவ்வொரு நாளும் மக்களுடன் இருக்க மற்றும் மனித சகவாசம் மற்றும் நட்பு என இவை அனைத்தையும் அனுபவிக்க விரும்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.
@EPA Photo
@MOVIESTOREMOVIESTORE/SHUTTERSTOCK