நான் குணமடைந்தவுடன் அணிக்காக அதை செய்வேன்! உலகக் கோப்பையில் விலகிய பும்ரா
தனக்கு வாழ்த்து, ஆதரவு தெரிவித்தவர்களுக்கு பும்ரா நன்றி கூறியுள்ளார்
உலகக் கோப்பையில் விளையாட முடியாவிட்டாலும் அணியை உற்சாகப்படுத்துவேன் என பும்ரா ட்வீட் செய்துள்ளார்
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தில் இருந்து குணமடைந்தவுடன் அணியை உற்சாகப்படுத்த அவுஸ்திரேலியாவுக்கு வருவேன் என தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் தொடங்க உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி பட்டியலில் பும்ரா இடம்பெற்றிருந்தார். ஆனால் அவர் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது.
இதன் காரணமாக பும்ரா தொடரில் இருந்து விலகுவதாகவும், அவருக்கு பதிலாக மாற்று வீரரை விரைவில் அறிவிப்போம் எனவும் பிசிசிஐ தெரிவித்தது. இந்த நிலையில் பும்ரா தற்போது வெளியிட்டுள்ள பதிவில்,
'நான் இந்த முறை டி20 உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக இருக்க மாட்டேன் என்பது கடினமாக இருக்கிறது. ஆனால் எனது அன்புக்குரியவர்களிடம் இருந்து நான் பெற்ற வாழ்த்துக்கள், கவனிப்பு மற்றும் ஆதரவிற்கு நன்றி. நான் குணமடைந்தவுடன் அவுஸ்திரேலியாவில் பிரச்சாரத்தின் மூலம் எனது அணியை உற்சாகப்படுத்துவேன்' என தெரிவித்துள்ளார்.
Reuters