மனைவியின் நகைகளை விற்று... முகேஷ் அம்பானியால் கோடிகளை சம்பாதித்த தமிழர்
தமிழகத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து, புதிதாக தொழில் தொடங்கி இரண்டு முறையும் தோல்வி கண்டு, இன்று ரூ 6929 கோடி நிறுவனத்தை உருவாக்கி சாதித்துள்ளார்.
எதிர்பார்த்த வெற்றி
தமிழரான VSS Mani பாடசாலை மற்றும் கல்லூரி படிப்பை முடித்த பிறகு, டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்புக்கு என இணைந்தார். அத்துடன் சார்ட்டர்ட் அக்கவுண்டன்சிக்கும் தம்மை தயார் படுத்த தொடங்கினார்.
ஆனால் பொருளாதார நெருக்கடியால் படிப்பை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட, விற்பனையாளராக வேலைக்கு சேர்ந்தார். பல இடங்களில் விற்பனையாளராக பணிபுரிந்த மணி, ஒருகட்டத்தில் சொந்தமாக தொழில் தொடங்க விரும்பினார்.
நண்பருடன் இணைந்து 1989ல் AskMe என்ற நிறுவனத்தைத் தொடங்கினார், ஆனால் அந்த நிறுவனம் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை. மனம் தளராத மணி 1992ல் திருமணம் தொடர்பான பத்திரிகை ஒன்றை தொடங்கினார். அதுவும் தோல்வியை பரிசளிக்க, வேறு வழியின்றி மீண்டும் நிறுவனம் ஒன்றில் வேலைக்குத் திரும்ப முடிவு செய்தார்.
தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த மணி, அங்கே Yellow Pages மற்றும் தொலைபேசி டைரக்டரிகளைக் கையாண்டார். அப்போது தான் அவருக்கு Just Dial என்ற திட்டம் உருவானது. இதனை தமது மனைவிக்கும் தெரியப்படுத்த, முதலீடு தொகைக்கு வேறு வழியின்றி மனைவியின் நகைகளை விற்கும் நிலை ஏற்பட்டது.
வாடகை கட்டிடம் ஒன்றில் Just Dial நிறுவனத்தை மணி தொடங்கினார். 1996 காலகட்டத்தில் தொலைபேசிகள் பரவலாக பயன்பாட்டிற்கு வர, தரைவழி தொலைபேசி இணைப்பு பெறுவதும் எளிதாக்கப்பட்டது. தொலைபேசி இணைப்புகள் அதிகரிக்க, Just Dial நிறுவனமும் வளர்ச்சி கண்டது.
முகேஷ் அம்பானி
இதனையடுத்து தமது நிறுவனத்தை விரிவுபடுத்த முடிவு செய்த மணி, தொலைபேசி ஊடாக உணவு ஆர்டர் செய்வதும் டிக்கெட் முன்பதிவு சேவையும் தொடங்கினார். 2000 ஆண்டில் Just Dial நிறுவனத்தின் இணையபக்கம் துவங்கப்பட்டது. 2007ல் Just Dial சேவையின் ஒன்லைன் பிரிவு தொடங்கப்பட்டது.
2007 காலகட்டத்தில் Just Dial நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 4,000 கோடியை எட்டியது. 2013ல் பொதுத்துறை நிறுவனமாக உயர்ந்தது. இதனால் Just Dial நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 6000 கோடி என அதிகரித்தது.
Just Dial நிறுவனத்தின் வளர்ச்சியும் அதன் தேவையையும் நன்கு அறிந்த முகேஷ் அம்பானி 2021ல் Just Dial நிறுவனத்தின் 41 சதவீத பங்குகளை ரூ 3497 கோடிக்கு கைப்பற்றினார். மணியிடம் இருந்த பங்குகளின் மதிப்பு ரூ 1332 கோடியாக இருந்தது.
மட்டுமின்றி, Just Dial நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் மணி தொடர்ந்தார். இந்த நிலையில், மணியிடம் இருக்கும் ரூ 1332 கோடி மதிப்பிலான Just Dial பங்குகளுக்கு ரூ 2200 கோடி தொகையை அளிக்க முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்தது.
மட்டுமின்றி, புதிய பங்குகளுக்கு என ரூ 2165 கோடியும் அளிக்க முன்வந்தது. தற்போது Just Dial நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 6,929 கோடி என்றே தெரிய வந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் 66.95 சதவீத பங்குகளை கைவசம் வைத்துள்ளது. 2024ல் மட்டும் ரூ 1348 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |