லிஸ் ட்ரஸின் திட்டம் கிரகத்திற்கே மரண தண்டனை! போராட்டத்தில் ஈடுபட்ட பிரித்தானிய பெண்ணை தூக்கிச் சென்ற பொலிஸார்.. வீடியோ
நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கூடிய வாட்டர்லூ பாலம் போராட்டங்களின் மையமாக இருந்தது
கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட குறைந்தது 35 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பிரித்தானியாவில் புதிய எண்ணெய் உரிமங்களை பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண் போலீசாரால் தூக்கிச் செல்லப்பட்டார்.
பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் புதிதாக எண்ணெய், எரிவாயு எடுப்பதற்கு உரிமை கோரியுள்ளது அந்நாட்டில் போராட்டங்களை தூண்டியுள்ளது.
லண்டன், நாட்டிங்காம், மான்செஸ்டர் உள்ளிட்ட பல பிரித்தானிய நகரங்களில் லிஸ் ட்ரஸ்ஸின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உட்பட பலர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
Now that's how you stay on message.
— Euronews Green (@euronewsgreen) October 4, 2022
This climate activist from @juststop_oil continued to highlight the importance of banning new oil projects even while being dragged away by police at a protest in London on Sunday. pic.twitter.com/PcbXHwyzf7
அந்த வகையில் லண்டன் நகரில் காலநிலை ஆர்வலரான பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது பொலிஸார் அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர்.
எனினும் செய்தியாளர் அவர் முன் மைக்கை நீட்டியபோது அவர் பிரதமரின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், 'நான் என் மகனுக்காக இதைச் செய்கிறேன் - காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கத்தின் செயலற்ற தன்மை நம் அனைவருக்கும் மரண தண்டனை.
Reuters
ஐக்கிய நாடுகள் சபை நமக்கு புதிய எண்ணெய் வேண்டாம் என கூறியுள்ளது. ஆனால் லிஸ் ட்ரஸ் 130 புதிய எண்ணெய் உரிமங்களை வழங்க விரும்புகிறார். அது இந்த கிரகத்திற்கு மரண தண்டனை' என தெரிவித்தார்.
Just Stop Oil