2.5 ஏக்கரில் வீடு, நீச்சல் குளம், தியேட்டர் என கண்ணாடி வீட்டில் வாழும் பிரபல பாடகர் - அவருடைய சொத்து மதிப்பு?
பிரபல பாடகர் ஜஸ்டின் பீபர் (Justin Bieber) தனது குரல் மற்றும் பாடலுக்காக உலகம் முழுவதும் மிகவும் பிரபல்யமானவர்.
இவருக்கு தற்போது 30 வயது மட்டுமே ஆகிறது. இவருடைய Baby என்ற பாடல் தான் தமிழ் மக்களை ஆங்கில பாடல்களை பார்க்க ஈர்த்தது என்றால் மிகையாகாது.
இவர் ஒர் சிறந்த பாடகர் மட்டும் என்று கூறமுடியாது. இவருடைய ஆடம்பர வாழ்கையை பார்த்தால் வாயில் கையை வைக்க தான் நேரிடும்.
ஆடம்பர வாழ்க்கை வாழும் பிரபல பாடகர்
Justin Bieber அடிக்கடி தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக ஊடக தளங்களில் பகிர்வது வழக்கம். இவர் மிகவும் ஆடம்பரமான பங்களாவில் வசிக்கிறார்.
கலிபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸில் உள்ள பாடகரின் பங்களாவின் விலை சுமார் 200 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Bieber தனது மனைவி ஹெய்லி பீபருடன் (Hailey Bieber) திருமணமான 18 மாதங்களுக்குப் பிறகு இந்த மாளிகையை வாங்கினார்.
2.5 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த வீட்டில் 7 படுக்கையறைகள், உடற்பயிற்சி கூடம், தியேட்டர் மற்றும் பல பொருட்கள் உள்ளன.
வீட்டிற்கு வெளியே ஒரு பெரிய நீச்சல் குளம் மற்றும் விளையாட்டு மைதானம் உள்ளது.
இது தவிர, Justin Bieber லாஸ் ஏஞ்சல்ஸில் (los angeles) ஒரு அழகான மாளிகையை வைத்திருக்கிறார். அதற்காக அவர் ஒவ்வொரு மாதமும் ரூ.24 லட்சம் வாடகை செலுத்துகிறார்.
இந்த இடத்தில் இரவு விடுதி முதல் திரையரங்கம் வரை அனைத்தும் கட்டப்பட்டுள்ளன.
பயன்படுத்தும் வாகனங்கள்
ஜஸ்டின் பீபர் (Justin Bieber) உலகின் மிக விலையுயர்ந்த கார்களின் அற்புதமான சேகரிப்பை வைத்திருக்கிறார்.
அதில் ரூ.11 கோடி மதிப்புள்ள புகாட்டி வேய்ரான் கிராண்ட் ஸ்போர்ட் (Bugatti Veyron Grand Sport), ரூ.5 கோடி மதிப்புள்ள லம்போர்கினி அவென்டடோர் எஸ்(Lamborghini Aventador S), ரூ.7 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் வ்ரைத் (Rolls Royce Wraith), சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz), ஆடி, ஃபெராரி எஃப்430 (Audi and Ferrari F430) போன்றவற்றை வைத்துள்ளார்.
இவ்வளவு பணத்தை எப்படி சம்பாதிக்கிறார்?
ஜஸ்டின் பீபரின் (Justin Bieber) முக்கிய வருமானம் கச்சேரிகள். ஜஸ்டின் பீபர் முதல் உலகப் பயணத்தின் மூலம் ரூ. 400 கோடியும், இரண்டாவது உலகச் சுற்றுப்பயணத்தின் மூலம் ரூ. 582 கோடியும் சம்பாதித்துள்ளார்.
2016-17 ஆம் ஆண்டின் உலக சுற்றுப்பயணத்தின் மூலம் ரூ.2 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளார்.
20 வயதில் இவருக்கு கிராமி விருது வழங்கப்பட்டது.
நாலாயிரம் கோடி சொத்துக்கு சொந்தக்காரராகிய இவர் கச்சேரிகள் மற்றும் பாடலின் உதவியுடன் ஆண்டுக்கு சுமார் 5000 கோடி சம்பாதிக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |