அம்பானி வீட்டு திருமணத்தில் பாடிய ஜஸ்டின் பீபர்.., இவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு?
இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமண முந்தைய சங்கீத் விழாவில் பாடகர் ஜஸ்டின் பீபர் கலந்து கொண்டார்.
ஆனந்த் அம்பானி திருமணம்
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் 3 நாள் நடைபெறவுள்ளது.
'சங்கீத்' விழா
இந்நிலையில், கடந்த 5 -ம் திகதி 'சங்கீத்' விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தோனி, ஷ்ரேயாஸ் ஐயர், நடிகை நேஹா சர்மா, நடிகை அலியா பட், அட்லீ, பாலிவுட் நடிகை சாரா அலி கான், பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த விழாவில் பிரபல பாப் பாடகரான ஜஸ்டின் பீபர் (Justin Bieber) கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆனந்த் அம்பானியின் சங்கீத் விழாவில் தனது பாடல்களான பாடல்களான பேபி, பீச்சஸ், லவ் யுவர்செல்ஃப் மற்றும் சாரி போன்ற பாடல்களை பாடி Justin Bieber அரங்கத்தை அதிர வைத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் Justin Bieber பாடுவதற்காக அவருக்கு ரூ.83 கோடி (10 மில்லியன் டொலர்) சம்பளம் வழங்கப்படுவதாக தகவல்கள் வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |