தொடர்ச்சியாக 5 விக்கெட் மெய்டன் ஓவர் - வரலாற்று சாதனை படைத்த ஜஸ்டின் கிரீவ்ஸ்
மேற்கிந்திய தீவுகள் வீரர் ஜஸ்டின் கிரீவ்ஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார்.
தொடர்ச்சியாக 5 விக்கெட் மெய்டன் ஓவர்
2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி, மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ளது.
தரூபாவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் 311 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

அதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 282 குவித்து ஆல் அவுட் ஆனது.
மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஆல் ரவுண்டர் ஜஸ்டின் கிரீவ்ஸ் 5 விக்கெட்களை கைப்பற்றியதோடு எந்த வீரரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார்.
இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 11 ஓவர்களை வீசி, 27 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

இதில், 6 ஓவரில் ஓட்டங்கள் எதுவும் வழங்காமல் மெய்டன் ஓவர் வீசியதோடு, தொடர்ச்சியாக 5 மெய்டன் ஓவர்கள் வீசி 5 விக்கெட்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
2016 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் தொடர்ச்சியாக 4 விக்கெட் மெய்டன் ஓவர்கள் வீசியதே சாதனையாக இருந்தது.
மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவே அவரது முதல் 5 விக்கெட் சாதனையாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |