ஒரே இடத்தில் 440 உடல்கள்! இந்த அட்டூழியங்களை கனடா கண்டிக்கிறது.. கொந்தளித்த பிரதமர் ட்ரூடோ
இஸியம் நகரில் 440 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது இதயத்தை நொறுக்கியதாக வேதனை தெரிவித்த ஜஸ்டின் ட்ரூடோ
உக்ரைன் மக்களுக்காக நாங்கள் தொடர்ந்து இருப்போம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு
உக்ரைனில் ஒரே இடத்தில் 440 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார்.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த இஸியம் நகரை உக்ரைன் தன் வசம் கொண்டுவந்துள்ளது. கிழக்கு நகரமான இஸியத்தில் 440க்கும் மேற்பட்ட உடல்கள் அடங்கிய பெரிய புதைவிடம் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தலைமை புலனாய்வாளர் கூறுகையில், 'சிலர் பீரங்கித் தாக்குதல்களால் இறந்தனர், சிலர் கண்ணிவெடி விபத்தால் இறந்தனர். சிலர் விமானத் தாக்குதல்களால் இறந்தனர்' என தெரிவித்தார்.
PC: Ukrainian Defence Ministry
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள பதிவில், 'இஸியம் நகரில் வெகுஜன புதைவிடம் பற்றிய அறிக்கைகள், உக்ரைனில் நடந்த பயங்கரம் மற்றும் இதயத்தை நொறுக்கும் வகையில் இருந்தது.
இந்த வெறுக்கத்தக்க அட்டூழியங்களை கனடா கண்டிக்கிறது. குற்றவாளிகளை கணக்கில் வைக்க கூட்டாளர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவோம். மேலும் உக்ரைன் மக்களுக்காக நாங்கள் தொடர்ந்து இருப்போம்' என தெரிவித்துள்ளார்.
PC: PC: Blair Gable/Reuters