எல்லாவற்றிலும் என் பக்கத்தில் உன்னை தவிர யாருமில்லை! மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ட்ரூடோ
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோ
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றிய சோஃபி கிரெகோரேவை கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு எல்ல-கிரேஸ் மார்கரெட், ஹாட்ரியன் ட்ரூடோ, சேவியர் ஜேம்ஸ் என மூன்று பிள்ளைகள் உள்ளன.
@AP
பிறந்தநாள் வாழ்த்து
இந்த நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் தனது மனைவிக்கு, ட்ரூடோ ட்விட்டரில் புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து கூறியுள்ளார்.
அவரது பதிவில், 'பிறந்தநாள் வாழ்த்துக்கள் சோஃபி. இதிலிருந்து, இதுவரை மற்றும் இடையில் உள்ள எல்லாவற்றிலும், எனக்குப் பக்கத்தில் உன்னை விட யாருமில்லை... உன்னை காதலிக்கிறேன் என் அன்பே' என குறிப்பிட்டுள்ளார்.
Happy birthday, Sophie. From this, to this, and everything in between, there’s no one I’d rather have by my side… I love you, mon amour. pic.twitter.com/nolrIwnSa8
— Justin Trudeau (@JustinTrudeau) April 24, 2023