நாட்டையே உலுக்கிய இளம்பெண்ணின் மர்ம மரணம்! வெடித்த போராட்டம்..கனேடிய பிரதமர் கண்டனம்
ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன
ஈரானிய ஆட்சியானது அதன் கருத்துச் சுதந்திரத்தின் மீதான அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் - ஜஸ்டின் ட்ரூடோ
ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்துள்ளார்.
ஈரான் நாட்டில் மாஷா அமினி (22) என்ற இளம்பெண் ஹிஜாப் சரியாக அணியாததால் பொலிஸாரால் தாக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றார். பின் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நாடும் முழுவதும் பெண்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பெண்கள் பலரும் தங்கள் கூந்தலை வெட்டி போராட்டம் நடத்த தொடங்கினர். அதன் பின்னர் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
OZAN KOSE/AFP VIA GETTY IMAGES
இந்த நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஈரான் மக்களுக்கு கனடா ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
'ஈரானில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு கனடா ஆதரவு அளிக்கிறது. ஈரானிய ஆட்சியானது அதன் கருத்துச் சுதந்திரத்தின் மீதான அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
REUTERS/Blair Gable
மேலும், பெண்களுக்கு எதிரான தொடர்ச்சியான துன்புறுத்தல் மற்றும் பாகுபாடுகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்' என தெரிவித்துள்ளார்.
Iranwire via Reuters
Stringer/Anadolu Agency/Getty Images