போலந்து மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்! கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியதில் இருவர் பலியான சம்பவத்திற்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
போலந்து மீது ரஷ்யா தாக்குதல்
உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் ஒன்பது மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய ஏவுகணைகள் ஐரோப்பிய நாடான போலந்துக்குள் நுழைந்து தாக்கியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் என அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, போலந்திற்கான ரஷ்ய தூதருக்கு உடனடியாக விரிவான விளக்கங்களை வழங்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக, போலந்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லூகாஸ் ஜெசினா தெரிவித்துள்ளார்.
@Sean Kilpatrick/CP
போலந்து மக்களுக்கு இரங்கல்
இந்த சூழலில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ போலந்துக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், 'போலந்தின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து எனக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். நங்கள் இப்போது எங்கள் கூட்டாளர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். இந்த கடினமான நேரத்தில், போலந்து மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
I’m being briefed on the latest developments in Poland – we’re closely monitoring the situation, and we’re in contact with our partners and allies right now. During this difficult time, I’m sending my deepest condolences to the Polish people.
— Justin Trudeau (@JustinTrudeau) November 16, 2022
இதற்கிடையில், நேட்டோ உறுப்பு நாடான போலந்து மீது ரஷ்ய நடத்திய இந்த தாக்குதல், இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஐரோப்பாவில் சண்டைகள் மிக மோசமான மோதலாக சுழலும் அச்சத்தை மீண்டும் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
@Representational/Reuters
AP Photo