அவரது மறைவு செய்தி கேட்டு மனமுடைந்தேன்: கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
கனேடியாவின் முன்னாள் எம்.பி பாட் கார்னியின் மறைவுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
முன்னாள் எம்பி
கனேடிய அரசியல் மற்றும் பத்திரிகையில் பெண்களுக்கான முன்னோடி பாத்திரங்களை வகித்தவர் பாட் கார்னி.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் தெரிவு செய்யப்பட்ட முதல் பெண் கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினர் இவர் தான்.
TIMES COLONIST
அதேபோல் மாகாணத்தில் இருந்து செனட்டிற்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் கன்சர்வேடிவும் இவர் தான்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பாட் கார்னி தனது 88வது வயதில் காலமானார். இதனை அவரது மருமகள் ஜில் கார்னி அறிக்கை ஒன்றில் உறுதிப்படுத்தினார்.
ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல்
பார் கார்னியின் மறைவுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
'பாட் கார்னியின் மறைவு குறித்து நான் வருத்தமடைந்தேன். அவர் உண்மையிலேயே அரசியலிலும், பத்திரிகையிலும் ஒரு தடம் பதித்தவர். அவர் பலருக்கு வழிகாட்டியாக இருந்தார். அவருடைய மரபு, அவர்கள் வாயிலாக வாழும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்' என கூறியுள்ளார்.
I was sad to hear about Pat Carney’s passing. She was truly a trailblazer – in politics and in journalism. She was a mentor to so many and her legacy will live on through them. My deepest condolences to her loved ones and all those who are mourning this loss.
— Justin Trudeau (@JustinTrudeau) July 27, 2023
Reuters
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |