தடுப்பூசிகளுக்கு எதிராக போராடுவது பொறுப்பான தலைமையா? புதிய எதிர்க்கட்சித் தலைவரை கடுமையாக விமர்சித்த கனேடிய பிரதமர்
Pierre Poilievre-வின் கொள்கை நிலைப்பாடுகளை கடுமையாக விமர்சித்த ஜஸ்டின் ட்ரூடோ
கனேடியர்களுக்கு தேவை பொறுப்பான தலைமை தான் குறிப்பிட்ட ட்ரூடோ
கடந்த சனிக்கிழமையன்று கனடாவின் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ்வின் புதிய தலைவராக Pierre Poilievre தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2000களின் நடுப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.
புதிய எதிர்க்கட்சி தலைவருக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து தெரிவித்தார். ஆனால் கொள்கை ரீதியாக அவரை கடுமையாக விமர்சித்தார்.
தொழிலாள வர்க்க கனேடியர்களின் பாதுகாவலராக தன்னைக் காட்டிக் கொண்ட Poilievre பணவீக்கத்திற்காகவும், கோவிட்-19 தொற்றுநோய்களின் போது அரசாங்க செலவினங்களுக்காகவும் ஜஸ்டின் ட்ரூடோவை குற்றம்சாட்டினார்.
PC: THE CANADIAN PRESS/Darren Calabrese
மேலும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், கன்சர்வேடிவ்கள் எந்த புதிய வரி அதிகரிப்பையும் ஆதரிக்க மாட்டார்கள் என்று கூறினார். கனடா நாடாளுமன்றம் வரும் 20ஆம் திகதி மீண்டும் கூடவுள்ள நிலையில், புதிய எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டுகளுக்கு ட்ரூடோ பதிலடி கொடுத்துள்ளார்.
Pierre Poilievre-வின் சொல்லாட்சி மற்றும் கொள்கை நிலைப்பாடுகள், பொருளாதாரம் ஆகியவை பொறுப்பான தலைமைத்துவத்தை காட்டவில்லை என ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
'பல ஆண்டுகளாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் இணைந்து பணியாற்ற நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம் மற்றும் அதனை தொடர்ந்து செய்வோம். ஆனால் நாங்கள் பொறுப்பற்ற பொருளாதார யோசனைகளையும் கேள்வி கேட்போம் - ஏனென்றால் கனேடியர்கள் பொறுப்பான தலைமைக்கு தகுதியானவர்கள்.
PC: Jacques Boissinot/THE CANADIAN PRESS
கிரிப்டோகரன்ஸிகளில் முதலீடு செய்வதன் மூலம் பணவீக்கத்திலிருந்து விலகலாம் என்று மக்களுக்குச் சொல்வது பொறுப்பான தலைமை அல்ல. உயிர்காக்கும் தடுப்பூசிகளுக்கு எதிராகப் போராடுவது பொறுப்பான தலைமை அல்ல.
நோய்தொற்று காலத்தில் வேலைகளை காப்பாற்றி, குடும்பங்களுக்கு உதவி புரிந்த ஆதரவாளர்களை எதிர்ப்பது பொறுப்பான தலைமை அல்ல' என தெரிவித்துள்ளார்.