இத்தாலி பிரதமரை முதல் முறையாக நேரில் சந்தித்த ட்ரூடோ! எடுத்த முக்கிய முடிவுகள் என்ன?
ஜி20 மாநாட்டில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி ஆகியோர் முதல் முறையாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
இத்தாலி பிரதமருடன் முதல் சந்திப்பு
இந்தோனேசியாவில் நடந்து வரும் ஜி20 உச்சி மாநாட்டில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பல நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்திய ட்ரூடோ, இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனியை சந்தித்தார். உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பது உள்ளிட்ட சில விடயங்கள் குறித்து அவருடன் ட்ரூடோ விவாதித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 'இன்று, நான் பிரதமர் ஜியார்ஜியா மெலோனியை முதல் முறையாக நேரில் சந்தித்தேன். கனடாவிற்கும், இத்தாலிக்கு இடையிலான வரலாற்று உறவுகள், உக்ரைனுக்கு எண்களின் வலுவான ஆதரவு மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தவும், நல்ல வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் இணைந்து செயல்படுவது குறித்து விவாதித்தோம்' என தெரிவித்துள்ளார்.
Today, I had my first in-person meeting with Prime Minister @GiorgiaMeloni. We discussed the historic ties between Canada and Italy, our strong support for Ukraine, and working together to advance the relationship between our two countries and create good jobs. pic.twitter.com/V66QmqP5h8
— Justin Trudeau (@JustinTrudeau) November 16, 2022
மெலோனி அடிக்கோடிட்ட வர்த்தக உறவு
மேலும், இந்த சந்திப்பின்போது காலநிலை மாற்றம், பொருளாதார மீட்சி மற்றும் சமூகத்தில் பெண்களின் பங்கை வலுப்படுத்துதல் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கனடாவுடனான வர்த்தக உறவுகளின் முக்கியத்துவத்தை மெலோனி அடிக்கோடிட்டு காட்டினார். இது மூலோபாய கூட்டு ஒப்பந்தத்தின் கட்டமைப்பிற்குள் உருவாக்கப்பட்டது.