பிரான்சில் பற்றியெரியும் கலவரம் குறித்து மேக்ரானிடம் பேசிய ட்ரூடோ
கனடாவில் தற்போதைய காட்டுத்தீ உட்பட பல விடயங்கள் குறித்து ஜஸ்டின் ட்ரூடோ பிரான்ஸ் ஜனாதிபதியிடம் பேசியுள்ளார்.
பதற்றமான சூழல்
பிரான்ஸ் நாட்டில் 17 வயது இளைஞர் கொல்லப்பட்ட விவகாரத்தினால் உண்டான கலவரத்தினால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதுதொடர்பில் 667 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி வெளியிட்ட பதிவில் கைது செய்யப்பட்டவர்களில் பலர் இளம் வயதினர் என வேதனையை குறிப்பிட்டார்.
AFP
ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் மேக்ரான் விவாதம்
இந்நிலையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரான்ஸ் ஜனாதிபதியிடம் இந்த சம்பவம் குறித்து விவாதித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
'இன்று ஜனாதிபதி இமானுவல் மேக்ரானிடம் பேசினேன். கனடாவின் தற்போதைய காட்டுத்தீ நிலைமை குறித்து நாங்கள் விவாதித்தோம். மேலும் இந்த தீயை எதிர்த்து போராட பிரான்ஸ் வழங்கிய ஆதரவுக்கு நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன். பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கும் அதன் தாக்கங்களை நிவர்த்தி செய்வதற்கும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தினோம்' என தெரிவித்துள்ளார்.
President @EmmanuelMacron and I spoke today. We discussed the current wildfire situation in Canada, and I thanked him for the support France has provided to fight these fires. We reaffirmed our commitment to working together to tackle climate change and address its impacts.
— Justin Trudeau (@JustinTrudeau) June 30, 2023
அத்துடன் பிரான்சில் நடந்து வரும் போராட்டங்கள் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் மற்றும் உக்ரேனிய நிலைமை உள்ளிட்ட பிற பிரச்சனைகள் குறித்தும் விவாதித்ததாகவும் கூறியுள்ளார்.
AP
Reuters
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |